பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி மகளிர் 53

ளிர், அவர்கள் தங்தை உயிரோடு இருந்த காலத்தில் வாழ்ந்த செல்வவாழ்வும், அப்போது அவர்கள் மேற் கொண்டிருந்த இன்ப விளையாடல்களும் அவர் மனக்கண் முன்வந்து கின்றன : பாரியை அழிக்க எண்ணிய மூவேந் தர்கள், அவன் மலையை முற்றுகையிட்டுள்ளனர்; அம் முற்றுகைப் படையில் கலந்து வந்துள்ள யானேயும் தேரும் குதிரையும் பிறவும் கணக்கிலடங்கா; இவ்வாறு புறத்தே பகைவர் பெரும்படை ; ஆனல், அம் மகளிர்க்கு அதைக் குறித்துக் கவலைகொள்ளாக் குழந்தையுள்ளம், பறம்பு மலையின் உயரமான உச்சி யொன்றின்மீது ஏறிகின்றனர் ; மலேக்கோட்டைக்கு வெளியே வந்துகிற்கும் பகைவர் படைவரிசையைக் கண்டனர் ; பெரும்படை கண்டு அச்சங் கொள்வதற்கு மாருகப் பார்த்து நகைத்தனர்; நம் தங்தை யொருவரை அழிக்க மூன்று பெரும் அரசா களா ? இவ்வளவு பெரும் படையா படையில் கலந்து வந்திருக்கும் குதிரைகள் மட்டும் எவ்வளவு என்று எள னம் செய்துகொண்டே அக் குதிரைகளே ஒன்று இரண்டு என்று எண்ணிப் பார்த்தனர்; அன்று இவ்வாறு ஆடி மகிழ்ந்தனர்; அம் மகளிரின் இன்றைய கிலே . i என்று எங்கித் துயருற்ருர் ; முன்பு அவர்கள் பெற்றிருந்த செல்வ வாழ்வும், அவர்களின் இன்றையச் சீர் அழிந்த கிலேயும் அவரை ஆருத் துயர்க்கடலில் ஆழ்த்தின; குன்றேறி கின்று குதிரைகளே எண்ணிய அவர்கள், இன்று குப்பை மேடேறி, உப்புவண்டிகளே எண்ணும் கோரக்காட்சி கபி லர் கண்களைக் கடலாக மாற்றிற்று.

கபிலர் கண்ணிர், கவலைமறந்து களித்துத் திரியும் அம் மகளிர் உள்ளத்தே பண்டைய நினைவுகளே எழுப்பிற்று ; முந்திய முழுநிலா நாளில் தங்கள் கங்தையோடிருந்து, பல் வளம் கிறைந்த தங்கள் பறம்புமலையில் ஆடிப்பாடி அக மகிழ்ந்து வாழ்ந்த இன்ப நினைவுகளே எண்ணினர்; அன்று, தாங்கள் ஆடிப்பாடி அகமகிழ்ந்து வாழ்தற் கிடமாயிருந்த தங்கள் இன்பப் பறம்பு, இன்று, பகையரசர் ஆட்சிக் குரிமையாகிவிட்டது ; அன்று, தங்கள் ஆடல் பாடல்களே