பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெண்பாற் புலவர்கள்

அருகிருந்து கண்டு அகமும் முகமும் மலர மகிழ்ந்த தம் தந்தை இன்று இல்லை; இறந்துவிட்டான் ; ஒருமாத காலத்தில் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த இம் மாறுபாடு அம் மகளிர் உள்ளத்தை மத்தடிபட்ட தயிரேபோல் கலங் கச் செய்தது ; கங்கள் அவலவாழ்வு குறித்து அழுத அழுது பாடினர்; அவர்கள் அழுது பாடிய பாட்டிலே ஒன்று நமக்கும் கிடைத்துளது ; அது :

  • அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் :எம் குன்றும் பிறர்கொளார் ; இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார் : யாம் எந்தையும் இலமே.”

(புறம்: க.க.உ)

ஆற்ருது தாம் அழுவதைக்கண்டு அம் மகளிரும் அழுகின்றனர் என்பதறிந்தார் கபிலர் ; காமும் தேறினர் . மகளிரையும் தேற்றினர்; அம் மகளிர் மணப்பருவம் எய்திய மங்கையர்; ஆகவே, அவர்களேத் தக்கார்க்கு. மணஞ் செய்துவைப்பது, அவர் தந்தையின் நண்பனுகிய தன் கடனே என்று உணர்ந்தார்; மகளிரை அழைத்துக் கொண்டு விச்சிக்கோன் என்ற குறுகில மன்னன் ஒருவன் பால் சென்ருர்; அவன் வளஞ் சிறந்த மலைநாடுடையோன் ; யானைப்படையால் நிறைக்க பெரும் படையுடையான் ; அவனை அணுகி, அரசே! இதோ கிற்கும் இம் மகளிர், என் நண்பன் பாரியின் மகளிர்; பாரி, முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் என்ற புகழுடையான் ; குலத்தாலும் குணத் தாலும் கிறைந்த இவர்களே ஏற்று மணஞ்செய்து கொள் வாயாக’ என்று வேண்டினர்; ஆல்ை, பாது காரணத் தாலோ அவன், அம் மகளிரை யேற்றுக்கொள்ள மறுத்து விட்டான்.

முயற்சியைக் கைவிட்டாரல்லர் கபிலர்; இருங்கோ வள் என்ற மற்ருெரு சிற்றரசன்பால் சென்ருர்; பழைய தமிழ்க்குடிகளுள் ஒன்ருகிய வேளிர்குடியிலே வந்தவன்