பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி மகளிர் 55

அவன் ; பேராற்றல் வாய்ந்தவன் ; அவன் அரசவை சென்று அவனேக் கண்டார்; மகளிரைக் காட்டினர் ; ‘அரசே தன்னைப் பாடிவந்த புலவர்களுக்கே, தன் முக் அாறு ஊர்களையும் பரிசிலாகக் கொடுத்துப் புகழ்பெற்ற பாரியை நீ அறிவாய்; அவன் மகளிர் இவர்கள் ; கான் அப் பாரியின் உயிர்நண்பன் ; கபிலன் ; பாரி இறந்துவிட் டான் ; ஆகவே, இம் மகளிர்க்கு ஆவனபுரிதல் என் கடன்; இவர்களே நான் கினக்குத் தருகிறேன் ; ஏற்று மணஞ் செய்து கொள்வாயாக’ என்று வேண்டினர். அவர் வேண்டுகோளே அவனும் மறுத்தான்.

பெரும் புலவராய தம் வேண்டுகோளைக் குறுகில மன் னர்கள் மறுப்பதுகாண மனங்குன்றினர் கபிலர்; பேரரச கிைய பாரியின் மகளிரை இவ்வாறு அரசவைதோறும் அழைத்துத் திரிதல் மானக்கேடு என்று எண்ணினர் ; ஆகவே, தமக்கு வேண்டிய பார்ப்பார் சிலரிடத்தே அம் மகளிரை ஒப்படைத்தார் ; திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய கிருக்கோவலூர்க்குச் சென்ருர். அந் நாடு மலையமான்கள் என்ற ஒர் அரச மரபினரால் ஆளப்படுவது; அப்போது அவர்கள் வழியிலே வந்த சிற்றரசன் ஒருவன் ஆண்டுவந்தான் ; அவனேக் கண்டு, பாரி மகளிரை மணக்க அவனே இசையவைத்தார் ; பின்னர் அம் மகளிரை அழைத்துச் சென்று அம் மலையனுக்கு மணம் செய்து கொடுத்தார் ; பாரி மகளிரும் மலையனே மணந்து மகிழ்ந்து வாழாதனா. -

பாரி மகளிரின் திருமணத்தைப்பற்றிய மற்ருெரு

கதையும் தமிழ்நாட்டில் வழங்குகிறது; அதைப்பற்றி யறிந்துகொள்வதும் நன்று. -

பாரி மகளிர் பார்ப்பாரில்லத்தில் வாழ்ந்துகொண் டிருந்தனர்; ஒருநாள் பெருமழை பெய்துகொண்டிருந்தது; அப்போது ஒளவையார் மழையால் முழுதும் கனேந்த மேனியராய் அவ் வீட்டினுள் நுழைந்தனர்; அம் மகளிர் வந்தவர் ஒளவையார் என்பதை யுணர்ந்துகொண்டனர் ;