பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெண்பா ற் புலவர்கள்

ஒளவையாரை அணுகி நனேந்த அவராடையை அகற்றினர் ; உடுத்துக்கொள்ள அவர்க்கு வேறு ஆடை இல்லாமையால் தங்கள் நீலநிறச் சிற்ருடையைக் கொடுத்து நடுங்கும் அவர் உடற்குளிர் போக்கினர்; கொல்லையில் கொழுந்து விட்டு வளர்ந்திருக்கும் குப்பைக் கீரையைப் பறித்து வந்த னர்; சுவைபடச் சமைத்துச் சுடச்சுட அளித்தனர்; ஒளவை யாரின் உள்ளம் குளிர்ந்தது; ஊக்கம் பிறந்தது.

  • இன்னது இரக்கப் படுதல் இரக்தவர்

இன்முகம் காணும் அளவு. ” (திருக்குறள் : உஉச) என்ருர் திருவள்ளுவர். அவ் வறிவுரையினே மதியாது, வந்தவர் இன்முகம் காணும்வரையிலும் பொருள்களே வாரி வழங்குவதே வாழ்வின் பயன் என்று கொண்டான் அம் மகளிரின் தந்தை பாரி; அதனுலேயே உயிரும் அறங் தான் ; இதை அம் மகளிர் என்ருக அறிந்திருந்தனர்; அறிந்திருந்தும், தந்தையை இழந்து தனித்துயர் உற்றுத் தவிக்கும் அந் நிலையிலும், ஒளவையாருக்கு ஆடையும், உணவும் அளித்துப் பேணினர் ; -

எங்தை நல்கூர்ந்தான் இாப்பார்க்கு ஈந்து என்று அவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ?-பைந்தொடி! நின்று பயன் உதவி கில்லா அாம்பையின் கீழ்க் கன்றும் உதவும் கனி.' (நன்னெறி : க.எ)

என்ற செய்யுள், பாரிமகளிரின் பண்பு கருதியே பாடப்பட் டதுபோலும்; அவ் விளமகளிரின் செயல், ஒளவையார் உள்ளத்தில் அளவிலா மகிழ்ச்சியை உண்டாக்கிற்று ; உடனே,

' வெய்தாய் நறுவியதாய் வேண்டளவுக் தின்பதாய்

நெய்தான் அளாவி நிறம்பசந்த-பொய்யா

அடகு என்று சொல்லி, அமுதத்தை யிட்டார் கடகம் செறியாதோ கைக்கு.” 'பாரி பறித்த பறியும், பழையனுரர்க்

காரி அன்று ஈந்த களைக்கொட்டும்-சோமான்