பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாளி. மகளிர் 57

வாாாய் என அழைத்த வார்த்தையும் இம்மூன்றும் நீலச் சிற்ருடைக்கு நேர்.”

என்ற பாடல்களைப் பாடி அம் மகளிரைப் பாராட்டினர்.

பாடல்பாடிப் பாராட்டியதோடு கம் கடன் தீர்ந்தது எனக் கருதவில்லை அவர். அவர்களின் கிலேயறிந்து இரங்கி அவர்கள் திருமணத்தை முன் கின்று முடித்தலைத் தம் சுட கைக் கொண்டார்.

பாரி மகளிரை மணந்து கொள்ளத்தக்க பீடும் பெரு மையும், அறிவும், ஆற்றலும், ஆண்மையும், அழகும், ஒழுக்கமும், உயர்வும் உடையவன் யாவன் என எண்ணிப் பார்த்தார் ஒளவையார் ; இவ்வளவும் உடையவன் ஒருவன் உளன் ; அவன் தென் பெண்ணேயாறு பாயும் கிருமுனைப் பாடி நாட்டுத் திருக்கோவலூர் அரசன் தெய்வீகன் என்ப. வன்; அவ்விரு மகளிரையும் அவன்பால் அழைத்துச் சென்று மணம் செய்துகொள்ளுமாறு வேண்டினுள் ; புலவர் வேண்டுவனவற்றைக் குறிப்பால் அறிந்து, அவர் அகமும் முகமும் மலர அள்ளி அள்ளிக் கொடுக்கும் அருள் உள்ளம் உடையவனே அவனும் ; என்ருலும், ஒளவையாரின் வேண்டுகோளை ஏற்க மறுத்தான் ; ஒளவை யார்க்குச் செய்வதொன்றும் புலப்படவில்லை. 'பேரழகும், சீரிளமையும் வாய்ந்தவர் பாரி மகளிர் ; குலத்தால் குணத் தால் குறையுடையவரல்லர்; அறிவிலும், அன்பிலும் அனைவரினும் சிறந்தவர்; இவ்வளவும் இருந்தும், மன்னர் கள், இவர்களே மணக்க மறுப்பானேன்ரி மகளிர் முகத்தை யும் காண மறுக்குமளவு, மன்னர்கள் துறவுள்ளம் கொண்டுவிட்டனரோ என்ருல் இல்லையே அரசனுெருவன் பால் அழகுள்ள மகள் ஒருத்தி இருக்கிருள் என்றறிந்தால் போதும்; அவள் இசையினும் இசையாவிடினும் அவளே மணந்து கொள்ளத் துடிப்பர் : உற்றேரும், பெற்ருேரும் மறுத்தால், பெரும்படைகொண்டு, அவள் நாட்டையும், கோட்டையையும் அழித்து அவளே வலிதிற் பற்றிக் கொள்வர்; அவ்வளவு வெறி பிடித்தவர்கள்தானே அரசர்