பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெண்பாற் புலவர்கள்

கள் அவ்வாருகவும், அழகிற்சிறந்த ஆரணங்குகள், அவர் அரண்மனேவாயில் வந்து காத்துக்கிடப்பினும் அவர் களே ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனரே! என்ன காரணம்? என்று எண்ணி எண்ணிப் பார்த்தார். ஒன்றும் விளங்க வில்லை. அரசே! இம் மகளிரை மணக்க மறுப்பது ஏன் ?’ என்று அரசனேயே கேட்டார். -

'அறிவுசான்ற அம்மையே! இவ் விளமங்கையர் இருவரையும் மணந்துகொள்ள மறுக்கும் எண்ணம் எவ் ருக்கும் எளிதில் உண்டாகாது; என்ருலும், இவர்களோ பாரியின் மக்கள் ; பாரியோ, பேரரசர்களாகிய சேர , சோழ, பாண்டியர்களின் பகைவன்; அதனுலேயே அவனே அழித்தும் ஒழித்தனர்; இப்போது, நான் இவ்விரு மகளிர் களே மணந்துகொள்வதென்ருல், அம் மூவேந்தர் பகையை இரு கையேந்தி வரவேற்றவனுவேன் ; இன்பம் எனக் கருதித் துன்பத்தை மேற்கொள்ளேன் ; இன்று இவர்கள் இன்முகம் கண்டு இரங்கி இச்சை கொண்டால், மூவேந்தர் படை நாளே என் நாட்டின் மீது போர்தொடுக்குமே; அதைத் தடுப்பார் யார்? ஆகவேதான் அவர்களே மணக்க மறுக்கிறேன்.” என்று தன்மனத்திடை ஒருங்கே மண்டிக் கிடக்கும் ஆசையையும் அச்சத்தையும் வெளியிட்டான்.

பாரி மகளிரை மணக்கப் பார் மன்னர்கள் மறுக்கும் காரணத்தின் உண்மையை உணர்ந்தார் ஒளவையார் ; இதற்கு என்ன செய்வது என எண்ணினர் ; அவருக்கு ஒரு வழி தோன்றிற்று ; வேந்தர் மூவரும் தம்மிடத்தில் பேரன்புடையவர்; தாம் விரும்பும் எதையும் செய்யும் இதயமுடையவர்; அவர்களிடத்தில் பாரிமகளிர் துயர் கிலை கூறி, அவரை மணக்க விரும்பும் மன்னன்பால் பகை கொள்ளுதல் கூடாது என்று வேண்டினுல் அவர்கள் மறுக்கமாட்டார்கள்; மனம் ஒப்புவர். ஆதலின், அவர்கள் ஒப்புதல்ைப் பெற்றுத்தர உறுதிமொழியளித்து அரசனே இசைய வைத்தல் வேண்டும் என எண்ணினர்; அரசனும் அதற்கு உடன்பட்டான். உடனே ஒளவையார், தெய்வீ கன் பாரி மகளிரை மணந்துகொள்ள இசைந்ததை அறி