பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி மகளிர் 59.

வித்து, அம் மண விழாவிற்கு வந்து மணமக்களே வாழ்த் திச் சிறப்பிக்குமாறு மூவேந்தர்க்கும் அழைப்பு அனுப்பி ஞர்.

'சோலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவல் ஊாளவும் தான் வருக உட்காதே ;-பாரிமகள் அங்கவையைக் கொள்ள அரசர் மனமிசைந்தார் சங்கவையையும் கூடத் தான்.”

இது சேரனுக்கு அனுப்பிய அழைப்பிதழ்.

புகார் மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன் தகாதென்று தான்.அங் கிருந்து-கோதே கடிதின் வருக கடிக்கோவ லூர்க்கு விடியல் பதினெட்டாம் நாள்.'

இது சோழ வேந்தனுக்கு அனுப்பிய அழைப்பிதழ்.

' வையைத் துறைவன் மதுராபுரித் தென்னன்

செய்யத் தகாதென்று தேம்பாதே-தையலர்க்கு வேண்டுவன கொண்டு விடிய ஈரென்பான்நாள் ஈண்டு வருக இசைந்து.

இது பாண்டிய மன்னனுக்கு அனுப்பிய மண ஒல.

இவ்வாறு அரசர்க்கு அழைப்பு அனுப்பிய ஒளவை யார், பின்னர்த் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். திருமணச் செலவு வகைகளுக்குப் பொன் லும் பொருளும் ஏராளமாகத் தேவை என்பதை உணர்க் தார்; அவற்றைப் பிற அரசர்பால் இரந்து பெறுவதினும் தம் ஆற்றலால் தாமே தேடித்தருவதே சிறப்பு என்று கருதினர்; வருணனை நோக்கி, -

' கருணையால் இந்தக் கடல் உலகம் காக்கும்

வருணனே! மாமலேயின் கோவல்-திருமணத்தில் முன்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப் பொன்மாரி யாகப் பொழி.”