பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

好0 பெண்பாற் புலவர்கள்

என்ற பாடலைப் பாடினர் ; உடனே, அவ் ஆாார்க்கும், அம் மணவினேக்கும் வேண்டுமளவு பொன்மழை பெய்து மக்கள் மனதில், மகிழ்ச்சியை விளைவித்தது. பொன்னும் பொருளும் கிடைத்துவிட்டன; மணவிழாக் காண வருவோர் அழகிய ஆடையும், இனிய உணவும் விரும்புவர் ; அவற்றைப் பெற்று அளித்தலும் தம் கடனே என்று எண்ணினுள்.

'பொன்மாரி பெய்யும் ஊர் : பூம்பருத்தி ஆடையாம் ;

அங்காள் வயலரிசி ஆகும் ஊர் :-எங்காளும் தேங்குபுகழேபடைத்த சேதிமா காடதினில் ஒங்கும் திருக்கோவ லுனர்.”

' முத்தெறியும் பெண்னை முதுக் துதவிர்ந்து தத்தியநெய், பால் தலைப்பெய்து-குத்திச் செருமலைத் தெய்வீகன் கிருக் கோவலூர்க்கு வருமளவும் கொண்டோடி வா.” 叙

என்ற இரு பாடல்களைப் பாடினர் ; உடனே, அக் காட்டுப் பருத்திச் செடிகள் எல்லாம் ஆடைகளாகவே காய்த்தன ; கன்செய் வயல்களில் வளர்ந்திருக்கும் செந்நெற் பயிரெல் லாம் அரிசியாகவே விளக்துவிட்டன; திருக்கோவலூரை அடுத்துப் பாயும் பெண்ணையாறு நீரோடுவது நீங்கி, ஒரு பக்கம் நெய்யாகவும், ஒருபக்கம் பாலாகவும் பெருக் கெடுத்து ஒடத் தொடங்கிற்று.

இவ்வாறு திருமணத்திற்கான எல்லாம் இனிது கிறை வேறின ; கிருமண நாளும் வந்தது ; முடியுடை மன்ன ரும், குறுகில மன்னருமாக எல்லா அரசர்களும் வந்து சேர்ந்தனர். மணவிழாத் தொடங்கவேண்டிய நேரம் ; தெய்வீகனுக்கு அளித்த வாக்கை கிறைவேற்ற எண்ணி னர்; அங்கவை, சங்கவை ஆகிய அவ்விரு மகளிரைத் தெய்வீகன் மணஞ்செய்து கொள்வதைத் தடுக்கவில்லை; அதுகுறித்து அவளுேடு பகை கொள்ளோம் ; இம் மணம் நிகழ்வது எங்களுக்கும் விருப்பமே ' என்று அறிவிக்கு மாறு ஒளவையார் மூவேந்ததையும் வேண்டினர். அரசர்