பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி மகளிர் 61

கள் ஒளவையாரை நோக்கி, அம்மையே, இம் மணம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாயின், இத்திரு மணப் பக்தரிலே ஏதேனும் ஒர் அற்புதம் நிகழ்தல் வேண்டும்; நிகழ்ந்தால், இத் திருமணத்திற்கு எங்கள் இசைவினைத் தருவோம்; மனமக்களையும் வாழ்த்திப் போற்றுவோம்,' என்று கூறிஞர்கள்.

உடனே ஒளவையார், திருமணப் பந்தலுக்குக் காலாக கிற்கும் பனந்துண்டு ஒன்றை நோக்கி,

" திங்கட்குடையுடைச் சோனும், சோழனும், பாண்டியனும்

மங்கைக்கு அறுகிட வந்து நின்முர் மனப்பந்தரிலே : சங்கொக்க வெண்குருத்தீன்று, பச்சோலை சலசலத்து அங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து துனிசிவந்து பங்குக்கு மூன்று பழந்தா வேண்டும் பனந்துண்டமே..? என்ற பாடலைப் பாடினர். உடனே, வெட்டுண்டு உலர்ந்து. போன அப் பனந்துண்டு உயிர்பெற்றது; வெண்குருத்து வெளிவந்து பச்சோலையாக மாறிச் சலசல என ஒலித்தது; ஒருபால் பனங்குலையொன்று தோன்றி, துங்கு முற்றிக் காயாகிக், காய் கனியாகிக் காட்சியளித்தது. ஒளவை யாரின் இவ்வரும் பெரும் செயல் கண்டு அச்சமும், வியப் பும் கொண்டனர் அரசர்கள் மூவரும். மணவினேக்கு மேலும் தடையாக இருத்தல் தகாதெனக் கொண்டனர்; மணவிழாவை முன்கின்று முடித்து, மணமக்களே வாழ்த்தி மகிழ்ந்தனர். இவ்வாறு பாரிமகளிர்க்கு மணம் செய்து கண்டு களித்தார் ஒளவையார். -

பாரிமகளிர் திருமணத்தைப்பற்றி மேலும் பல கதை கள் நாட்டில் வழங்குகின்றன. பாரிமகளிரைப் பார்ப் பார்க்கு மணஞ்செய்து கொடுத்தார் கபிலர் என்ற ஒரு கதையும் உண்டு ; அங்கவை, சங்கவை என்ற இருவரும் பாரிசாலன் என்ற சிங்கள காட்டு மன்னனின் மகளிராவர்; ஒளவையார் அவர்களேத் தெய்வீகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்; இவ்வாறு ஒரு கதை கூறும் ; பாரி மகளிருள் ஒருத்தியை மலேயனுக்கு மணம்செய்து கொடுத்