பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. பெருங்கோழி நாய்கன்மகள் நக்கண்ணேயார்

இவர், பெருங்கோழி நாய்கன்மகள் நக்கண்ணேயார் என அழைக்கப் பெறுவர். சோழநாட்டுத் தலைநகர்களுள் ஒன்ருகிய உறையூர்க்குக் கோழி என்பது ஒரு பெயர். நாய்கன் என்பது கடல் வாணிகம் மேற்கொள்ளும் இனத் தார் வைத்துக்கொள்ளும் பட்டப் பெயர் ; கண்ணகியின் தங்தைக்கும் மாநாய்கன் என்பதே பெயராதல் காண்க. ஆகவே, நக்கண்ணேயார், உறையூர்ப் பெருவணிகன் ஒருவன் மகளாதல் பெற்ரும். கண்ணன் என ஆடவர்க்குப் பெயரிடுவர் ; அவ்வாறே, கண்ணே எனப் பெண்டிர்க்கும் பெயரிடுவர் ; அப்பெயரோடு என்ற சிறப்பும் சேர, நக்கண்ணையார் என ஆயிற்று.

போாவைக் கோப்பெரு நற்கிள்ளி என்ற சோழ அரசன் ஒருவன் உறையூரிலிருந்து ஊராண்டிருந்தான். அவன், ஆண்மையும் அழகும் கிறைந்த இளைஞன்; மற் போரில் வல்லவன். இக் கிள்ளியின் ஆண்மையும் அழகும் ஆற்றலும் கண்டு அவன்பால் காதல்கொண்டார் ஈக்கண்ணே யார். ஆனால், அவர் காதல் ஒருதலைக் காதலாயிற்று ; கிள்ளிபால் இவர் காதல் கொண்டார் ; ஆனால், அவனுக்கு இவர்பால் காதல் உண்டாகவில்லை. இதல்ை நக்கண்ணே யார் அவனேயடைந்து மணந்து மகிழ்ந்து வாழ முடிய வில்லை; அவனே அடையமாட்டாமையால் கவலே மிகுந்து, உடல் மெலிந்து கைவளேயும் கழலத் தொடங்கிற்று.

வளே கழலுவது கண்டு, தன் தகாக் காதலறிந்து தாய் கடிந்துகொள்வாளோ என்ற கவலை ஒருபால் ; வளை கழ லாமை வேண்டின், தானே சென்று அவன் உறவைப் பெறுதல் வேண்டும். ஆனால், காதலர் இருவர்க்கும் மணம் முடித்து வைப்பது, அவ்வூர் அவையில்வாழ் சான்ருேர் கடன் அவர் அதுகுறித்து ஒன்றும் செய்யா திருப்ப, அவர் அறியாது அவன் உறவைப் பெறுதல் அறன் அன்று என்ற அச்சம் மற்ருெருபால் : இவ்வாறு இருவகையாலும் கவலே. தாய் இல்லாதிருந்தால், கவலைகொண்டு வளே