பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கோழி நாய்கன்மகள் நக்கண்ணையார் 73

மகள் நலம்பேணத் தொடங்கிவிட்டாள். இதை உணர்ந்து கொண்டாள் தலைவி. இனி, களவொழுக்கம் மேற்கொள் வது இயலாது; மணந்துகொள்வதே வழி என அறிந் தாள். தன் கிலே, தன் காதலின் தன்மை, தன் தாய் கிலே ஆக இவற்றை அழகிய ஒர் உவமையால் விளக்கித் தன் கருத்தைத் தலைமகற்கு உணர்த்துகிருள் தலைவி.

சிறு கரையுடைய ஒரு பெருங்குளம்; கடமை பறிந்த காவற்காான் ஒருவன். ஒருநாள் இரவு காற்ருேடுகூடிய பெருமழை பெய்யத் தொடங்கிவிட்டது; குளம் முழு தும் நீர் நிறைந்துவிட்டது; மேலும் மழை பெய்து கொண்டே யிருக்கிறது ; காற்றும் கிற்காமல் வீசிக் கொண்டேயுளது; அதனல், குளத்துநீர் அலையெடுத்து மோசிக் கரையை அழிக்கவும் தொடங்கிவிட்டது. அதன் கரையோ அவ்வளவு பெருநீரைத் தாங்கும் ஆற்றல் அற்றது ; சிறியது; ஆகவே, அதன் காவற்காான், கரை எங்கே உடைந்துவிடும்ோ? எப்போது உடைந்துவிடுமோ ? என்ற கவலையால், இரவுமுழுதும் கண்மூடாது கரையைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே யிருக்கிருன். இந்தக் காட்சி யைத் தலைவனுக்குக் காட்டினுள் ; காட்டிவிட்டு 'கரை அழிந்துவிடுமோ என்று கவலைகொள்ளும் காவற்காரனப் போல் என் துயர்நிலை கண்டு கவலையால் கண் விழியாது காக்கிருள் என் தாய்; குளநீர்போல் பெருகியுளது என் காதல்; அக் குளநீரையும், அதன் மோதுதலையும் தாங்க ஆற்ருத அதன் சிறு கரைபோல், காதல் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தமாட்டாது சிறுமைப் படுகிறது, பெண் மைக் குணமெல்லாம் ஒழியத் தனித்து கிற்கும் நாண்” என்றுகூறி மணத்திற்கு உடன்படுத்துகிருள் தலைவனே.

“ ஈங்கைத்

துய்யவிழ் பனிமலர் உதிர வீசித் தொழின்மழை பொழிந்த பானட் கங்குல் எறி திரைத் திவலே , உம் சிறு கோட்டுப் பெருங்குளம் காவலன் போல அருங்கடி அன்னையும் துயில்மறக் தனளே.’ (அகம்: உடுஉ)

-്.