பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககூ, பேய்மகள் இளவெயினி

இவர் குறவர் குடியிற் பிறந்தவர் : இளமையிலேயே பாடல் புனேயும் ஆற்றல் வாய்ந்தவர்; இவர் பெயர்க்கு முன்வரும் பேய்ம்கள் என்ற தொடர் எதனுல் வந்தது என்பது புலனுகவில்லை : புறநானூற்றிற்கு அரிய உரை யெழுதி அளித்த பழைய ஆசிரியர், கண்ணுக்குத் தெரியாத பேயே இளவெயினி என்னும் பெயரோடு தோன்றிப் பாடிற்று என்ற கதை தன் காலத்தே வழக்கத்தில் இருக் தது எனக் கூறுவர் ; 'இவள் பேயாயிருக்கக் கட்புலனுய தோர் வடிவுகொண்டு பாடினுளொருத்தி யெனவும், இக் களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்ருர்கள் ; ஈண்டு கின்னேடு எதிர்ந்து பட்டோரில்லாமையான், எனக்கு உணவாகிய தசை பெற்றிலேன்' எனத் தான் பேய்மக ளானமை தோன்றப் பரிசில் கடாயினுள் எனவும் கூறு வாருமுளர். ஆனால், அவர் அக் கதையை நம்பாமை நன்கு புலனுகும். பேய்மகள் என்பது தெய்வமேறியாடும் தேவராட்டி அல்லது பூசாரிச்சியைக் குறிக்கும் ; தெய்வ முற்ருற்போல் வந்துகின்று குறி கூறுவது இவர்கள் தொழில்; அத்தகைய தேவராட்டிகளுள் இளவெயினி யும் ஒருவர்; ஆகவே, அவர் பேய்மகள் எனப்பட்டார் என்று கூறுவர் சிலர். போர்க்களத்துப் பிணந் தின்னும் பேய்மகளிரை வியந்து விரியப்பாடிய சிறப்பால் இளவெயி னியார்க்குப் பேய்மகள் என்பது சிறப்புப் பெயராயமைந்த தாகல்வேண்டும் என்பர் மற்றும் சிலர்.

பேய்மகளார், பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற அரசனைப் பாராட்டியுள்ளார். கடுங்கோ, சேரர் மாபிலே வந்த பேராசனதலேயன்றிப் புலவரும் புகழும் பெரும்புலவ வைன்; பாலைத்திணையைச் சிறப்பித்துப்பாடிப் பாலைபாடிய' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவன் ; கலித்தொகையுள் பாலைக்கலி முற்றும் இவன் பாடியனவே; இவையுேயன்றி, ஏன்ேய நால்களுள் வரும் பாலைத்திணைப் பாடல்களுள் பெரும்பாலன இவன் பாடியனவே. தலைமகளை நோக்கி,