பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்முடியார் - 77

அவன் ; அவனே அச்சுறுத்தி உண்ணுவிக்குமாறு, அஞ்சி, கையில் சிறுகோல் ஏந்தி அடிப்பான்போல் ஒங்குவான் ; இவ்வாறு அவனுல் வளர்க்கப்பட்டவன் இன்று ஒர் அழகிய இளைஞனுயின்ை; அவன் உச்சிக்குடுமியும், முகத்து மீசை யும் அழகை மேலும் அவன் மீது அள்ளிச் சொரிந்தன ;. இங்கிலையில் காட்டில் போர் மூண்டுவிட்டது; முன்னுள் போரில், அவன் முன்னேர் பலரும் மடிந்துவிட்டனர்; அழகும் ஆண்மையும் மிக்க அவ்விளஞன் மறுநாள் போர்க்களம் புகுந்தான். >

களம்புகுந்த அக் காளே, பகைவர் படைவரிசையுள்ளே பாய்ந்துசென்று களிறு பலவற்றைக்கொன்று கடனுற்றி, இறுதியில் கைப்படை இழந்து, களத்தே வீழ்ந்துகிடக்கும் களிறு ஒன்றின் மீது சாய்ந்துவிட்டான்; அவன் கிலே குறித்தும், தன் படைகிலே குறித்தும் கவலை கொண்டான் அஞ்சி ; அதேநேரத்தில், களிற்றின்மீது வீழ்ந்துகிடக்கும் அவனும் கவலைகொள்ளலாயினன்; ' கைப்படை யெல் லாம் போய்விட்டதே ! இன்னும் படையிருந்தால், பகைவர் களிறுகளில் மேலும் சிலவற்றையேனும் அழித்திருப் பேனே!” என்று எண்ணினுன் , எண்ணியவாறே தன் மார்பைத் தடவிக்கொடுத்தான் ; அங்கே பகைவர் ஏவிய அம்பொன்று தைத்துக்கிடப்பதை அறிந்தான் ; போர் வெறியால் அம்பு தைத்ததை அப்போதுவரை அறியாத அவன், அதைக்கண்டவுடனே பெருமூச்செறிந்தான். " அந்தோ போரிடும் வலிமையோடிருந்த அப்போது மார்புப்புண்ணில் அம்பொன்று கிடப்பதை அறியாது போனேனே, அறிந்திருந்தால், இவ்வம்பால், பகைவர் யானேயுள் ஒன்றையாவது வீழ்த்தியிருப்பேனே,” என்று கவலையுற்ருன்; இக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டி யுள்ளார் பொன்முடியார், . אי . .

"பால்கொண்டு மடுப்பவும் உண்னன் ஆகலின்,

செரு அது ஒச்சிய சிறுகோல் அஞ்சியொடு

உயவொடு வருந்து மன்னே; இனியே,

புகர்கிறங் கொண்ட களிறட் டாளுன்