பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உo. பொன்முடியார்

ஒளவையார்க்கு நெல்லிக்கனி கொடுத்தப் புகழ் பெற்ற அதியமான் நெடுமானஞ்சியைப் பாராட்டிய புலவர் களுள் பொன்முடியாரும் ஒருவர். அதியமான், தகடு ரைத் தலைநகர்ாகக்கொண்ட சிறுநாட்டை ஆண்டுவந்த அரசன் ; சிறந்த போர்வீரன்; பெருங்கொடை வள்ளல்; இதல்ை அவன் பெற்ற புகழ் அவனுக்குப் பகைவர் பல ரைத் தேடித்தந்தது ; பெருஞ்சோல் இரும்பொறை என்ற சேர அரசன் அகியமாைேடு பகைத்து அவன் தகடுரை முற்றுகையிட்டுத் தாக்கி அழித்து, அவனேயும் கொன்ருன். இத் தகடூர்ப்போர் நிகழும்காலத்தில், அதியமானேடு அத் தகடூரில் தங்கியிருந்து, அவ்வப்போதுள்ள போர்கிலைமையை அதியமானுக்கறிவித்து அறிவுரை கூறித் துணை புரிந்த புலவர்களுள் பொன்முடியாரும் ஒருவர் ஆவர்; அப்போது பொன்முடியார் பாடிய பாடல்கள் பல தகடுர் பாத்திரை' என்ற நூலில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, பழங் காலக் கோட்டைகளின் அமைப்பையும், அக் கோட்டை மதிலின்கண் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான படைப்பொறிகளையும் இன்றும் நாம் அறிந்துகொள்ளும் வகையில், விளங்க உரைக்கும் தன்மையுடையது.

தகடூர் யாத்திரையில் காணப்படும் பாடல்களே அல்லா மல், நூழிலாட்டு, குதிரைமறம் என்ற துறைதழுவி அவர் பாடிய பாடல்கன் இரண்டு புறநானூற்றில் உள்ளன. நூழி லாட்டு என்பது, பகைவர்படைகளைப் பாழ்படுத்திப் பெரும் போரிட்டுவரும் வீரன் ஒருவன், தன் கைப்படை யெல்லாம் போயவழி, தன் மார்பில் தைத்திருக்கும் வேலைப்பிடுங்கிப் பகைவர் படைமீது எறிந்து அழித்தான் எனப் பாடுவது ; அதியமான் நெடுமானஞ்சியால் அன் போடு வளர்க்கப்பட்டவன் ஒரு வீரன்; சிறு குழந்தையாய் இருக்கும்போது, அஞ்சி அவனுக்குப் பால் உணவு அளிப் பான்; விளையாட்டு கினேப்பால், அதை உண்ண மறுப்பான்