பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்முடியார் 79

பகையும் மிக்க காலம்; ஆகவே, அப் பகை போக்கி நாட் டைக் காப்பதே நாட்டுமக்களின் தலையாய கடன் ; நாடு காவலுக்கு நல்ல வீரர் பலர் தேவை; ஆகவே, நல்ல ஆண் மக்களைப் பெற்றுத்தருவதே நாட்டுத் தாய்மார்களின் தலையாய கடன்; மக்களப் பெற்றுவிட்டு, அவர்கள் வளர்ப் பிலே கவலைகொள்ளாதுபோயின், அவர்கள் கல்லுடல் பெறலின்றி நலிவர்; மக்கள் நலிந்துபோனுல், அவர்களைப் பெற்றும் பயனில்லாதுபோகும்; ஆகவே, மக்களப்பெற்ற தோடு தீர்ந்தது தன் கடன் என்று கின்றுவிடாமல், அம் மக்கள் இல்லுடல்பெற்று வாழுமாறு வளர்த்துவிடுவதும் தாயின் கடமையே; ஆகவே, ஈன்றுபுறங்கருதல் என் தலைக் கடன் ” என்று கூறினர்.

மகன் வளருகிருன்; வளரும் மகனே அப்படியே விட்டு விட்டால், அவன் நாடுகாவலுக்குப் பயன்படான்; தான், தன்வீடு, தன்ாடு, இவற்றிற்குத் தான் செய்யவேண்டிய தொண்டு, அத் தொண்டினே கிறைவேற்றும் வழிவகைகள் இவற்றை அவன் அறிந்துகொள்ளுதல்வேண்டும். அவற்றை அவன் தானே அறிந்துகொள்வான் என எதிர்பார்த்தல் இயலாது; அறிந்த ஒருவர் அவற்றை அவனுக்கு அறிவிக்க வேண்டும்; தன் மக்கள் நன்னிலைபெறவேண்டும் என்று விரும்புவோர், பெற்ருேளினும் வேறு இசார் ; பெற்றேர் இருவரில், தாய், வீட்டின் உள்ளிருந்து மக்களே வளர்த்துப் பழகியவளேயன்றி, வெளியேசென்று நாட்டின் தேவையை அறிந்தவள் அல்லள். அவற்றை அறிந்தவன் ஆண்மகனுகிய தந்தையே; ஆகவே, மக்களுக்கு அறிவூட்டுவது அவன் கடமையே; அறிஞர் பலர்கூடிய அவையில் தன் மகன் முதலிடம் பெறுமாறு அவனே அறிவுடையவனுக்குவது தக்தை கடனே. .

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்தி முந்தி யிருப்பச் செயல்.’ (கிருக்குறள் : சுஎ.)

என்ற வள்ளுவரும் கூறினர். ஆகவே, சான்றேன் ஆக்கு தல் தந்தைக்குக் கடனே' என்ருர். - - . . . . .