பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போந்தைப் பசலையார் 83

னேச் சிறிதுநேரம் உற்று நோக்கிவிட்டு நான் போகவா? என்றனன் ; செல்க' என்றனன் நானும்; நான் அவ்வாறு கூறியும் போகானுகித் தன் தேரைக் கையாற் பற்றிக் கொண்டு கின்றுகொண்டே யிருந்தான். அக் காட்சி இன்றும் என் கண்முன் கிற்கிறது ; இதுதான் உண்மை, இதுதவிர வேறு ஒன்றும் அறியேன்; கடவுள்மீது வேண்டு மானுலும் ஆணையிட்டுக் கூறுகிறேன்.” என்று கூறி முடித்தாள்.

இது, அவர் செய்யுட் பொருள் : இதுவே அறத்தொடு கிற்றல். தோழி அவ்வாறு கூறக்கேட்ட செவிலித்தாய், இளைஞன் இத் தோழியை நெருங்கிப் போகவா என்றத ல்ை, நம் மகளேப் பெற அவன் இவள் துணையை நாடியுள் ளான்; இவள் கூறுவதை நோக்கின், இவளும் அவனுக்குத் துணைசெய்துள்ளாள்; அவனேப் பெரு மனக்கவலைப்ால் மகள் உடல் மெலிந்தது. ஆகவே, அவனிடத்தில், இவளும் அன்புகொண்டிருக்கிருள்; தோழி போ’ எனச் சொல்லி யும் அவன் போகாமையால் அவனும் இவளிடத்தில் பேரன்புவைத்துள்ளான்; தேரில் வந்து சென்ருன்; ஆகவே, அவன் செல்வத்தாற் குறையிலன்; ஆதலால் இருவர்க்கும் மணஞ்செய்து மகிழ்வதே நம் கடமை என்று உணர்ந்தாள்.

ஒன்றைப்பற்றிய பேச்சு நீகழுங்கால் அப் பேச்சில் விருப்பம் இலாதார், "விேர் பேசுவது எமக்கு விருப்பம் இல்லை' என நேரே கூறுவது அத்துனே ஈன்றன்று எனக் கருதி, வேறு பொருள்பற்றிப் பேசத் தொடங்குவர் ; அல் ல்து அவனின் நீங்கி அப்பாற் செல்வர். இதை அறிந்தார் போல், தலைமகனேடு இருந்து உரையாடலை விரும்பாத அவ் விளமகளிர் கடலில் கப்பல் தோன்றுகிறது ; காணுவம் வாருங்கள்’ எனக் கூறிக்கொண்டே அவ்விடத்தின் நீங் கிச்சென்ற நிகழ்ச்சி கினேந்து இன்புறற்குரியதாம். இத் துணை அரும்பொருளெலாம் நிறைந்த அழகிய ஒரு பாட்டை அளித்தவர், போங்தைப்பசலையார் என்பதல்ல்து, இவர் வாலாருக வேறு எதையும் அறிந்துகொள் வதற்கில்லை.