பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ மாற்பித்தியார்

மாற்பித்தியார் பாடிய பாக்கள் இரண்டிலும், இல் லறத்தில் இனிது வாழ்ந்திருந்த கணவன், துறந்து காடு சென்றுவிட்ட கொடுங் காட்சியைக்கண்டு அவன் மனேவி அழுது அாற்றியதையே பாட்டின் பொருளாக மேற் கொண்டுள்ளார்; அவ்வாறு அழும் மனைவி மாற்பித்தி யாரே துறந்து காடுசென்று விட்டவன் மாற்பித்தியார் கணவனே ; இல்லறத்தே இருந்து இன்பம் அளித்த தம் கணவன், துறந்து மறந்துபோனதைக் கண்டு மாற்பித்தி யார்க்கு மயக்கமும் பித்தமும் உண்டாயின; தம் இழிநிலை குறித்துப் பாடிப் பாடி அழுதார்; அவ்வாறு அவர் பாடிய ப்ாடல்களே அவை ; ஆக்வேதான் அவருக்கு மாற்பித்தி யார் என்பது பெயராயிற்று என்று கூறி, மால் என்ருல் மயக்கம் : பித்தி என்பது பித்தன் என்பதன் பெண்பாற் பெயர் ; ஆகவே அறிவு பிறிதானவள் என்பதே மாற் பித்தி என்ற சொல்லின் நேர்பொருளாம் என்று கூறுவர் சிலர்.

புறத்துறை தழுவிய பாக்களில் தாபதகிலை என்ற துறை தழுவிய பாடல்கள், தாபதவாகை என்ற துறை தழு விய பாடல்கள் என்று இருவகைப் பாக்கள் இருக்கின்றன ; தாபதங்லேயாவது, கணவன் இறந்துபோக இருந்து வருங் தும் மனேவியின் கைம்மை கிலே குறித்து வருந்திப் பாடல். தாபதவாகையாவது துறவிகளின் துறவு வாழ்க்கையினச் சிறப்பித்துப் பாடல். மாற்பித்தியார் பாடியபாக்கள் இரண்டும் தாபதவாகை என்ற துறை தழுவியன ; ஆகவே, கணவன் துறவு கண்டு மனைவி வருந்துவதோ, அல்லது கணவன் துறவு கண்டு வருந்தும் மனைவி நிலைகண்டு பிறர் வருந்து வதோ அல்ல அதன் பொருள்; அப் பாக்கள் இரண்டும், இல்லறத்தில் இருந்து இன்பம் நுகரவேண்டிய இளமைப் பருவத்திலேயே பெருந்துறவியாகிவிட்ட ஒருவனின் பெரு மையைப் பாராட்டிக் கூறுவனவாம் ; ஆகவே, அப் பாக்கள் மாற்பித்தியார் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை விளக்குவன அல்ல ; அப் பாட்டின் பொருளுக்கும், அவர்