பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பெண்பாற் புலவர்கள்

வாழ்க்கை வரலாற்றிற்கும் யாதோர் தொடர்பும் இல்லை. இதல்ை, அவர் பெயருக்குக் கூறப்பட்ட பொருள் தவ அடையது என்று ஆகாது ; அப் பெயரின் பொருள் அதுவே ஆல்ை, அவருக்கு அப் பெயர் ஏன் வந்தது என் பதை அறிய முடியவில்லை. மாரிக்காலத்தில் மலரும் இயல்பினதான பித்திகம், புலவர் பலரின் பாராட்டைப் பெற்ற பெருமை வாய்ந்தது.

  • மாரிப் பித்திகத்து ஈரிதழ் அலரி.?? (நற் : கூகச) ' மாளிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை.” (குறுந் : கசு அ)

இவ்வாறு புலவர்களின் பாராட்டைப் பெற்ற மாரிப் பித்திகத்தை, மாண்புறச் சிறப்பித்துப் பாடிய சிறப்பால், இவர், மாளிப்பித்தியார் என அழைக்கப் பெற்றுளார். மாற்பித்தியார் என்பதன்று இவர் பெயர்; அவ்வாறு பாடிய அவர் பாட்டு இப்போது கிடைத்திலது போலும் எனக்கூறுவர் வேறுசிலர். -

இனி, அவர் பாடிய பாக்கள் இரண்டின் பொருளையும் திரட்டித் தருகிருேம்; படித்து இன்புறுங்கள் :

பரந்து உயர்ந்த வீடு; ஒவியத்தில் காண்பதே போன்று அழகு நிறைந்தது; அந்த வீட்டிலே, கொல்லிப் பாவைபோல் குறைவின்றி கிறைந்த அழகுடைய மகளிர் ; அவர்கள் அறிவையும் மயக்கும் ஆண் அழகன் ஒருவன்; அவன் தெரு வழியே சென்ருல், அவனேக்கண்டு அன்பு கொண்ட மகளிர் அவனைப் பெறமாட்டாக் கவலையால் தம் கைவளை கழலுமாறு தளர்வர்; அவனே விரும்பாத மகளிர் இலர்; அவன், தான் விரும்பிய மகளிரைப் பெறமாட்டாது. பின்னடைந்ததும் இலன் , மயிலை வலைகொண்டு மடக்கும் வேட்டுவனேபோல், மகளிரைத் தன் சொல்வலையால் பிணிக்கும் சொல்லழகன்; இவ்வாறு, செல்வச் செருக்கிலே வாழ்ந்த அவன் வாழ்வின் சிறப்பினைக் கண்டவர், இன்று அவன் நிலையைக் கண்டால் அவனே வியந்து பாராட்டா திரார் ; இப்போது அவன் வாழ்வது நாட்டிலே, பெரிய வீட்டிலே அன்று ; காட்டிலே வாழ்கிருன் , காலையில்