பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருேக்கத்து நப்பசலையார் 89.

துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் திருமுடிக்காரி, மலேய மான் சோழிய ஏனுதி திருக்கண்ணன் என்போர்.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பெரும்புலவர் பலருடைய பாராட்டைப் பெற்ற பேரரசன் ; பதின்மூன்று புலவர்கள் அவனைப் பாராட்டியுள்ளனர் என்ருல் அவன் புகழை என்னென்பது! புலவர் பாராட்டப் பெறுதற்கு அவன் கொடையும், வீரமும் மட்டும் காரணமாகா , அவன் புலமையும் காரணமாம்; அவனே ஒரு பெரும் புலவன்; அப் புலவர்கள் பாட்டோடு ஒருங்குவைத்து மதிக்கத்தக்க அழகிய பாடல் பாடும் ஆற்றல் வாய்ந்தவன். கிள்ளிவள வன், உறையூரைத் தலைநகராகக்கொண்டு அதைச் சூழ இருந்த சோழநாட்டை ஆண்டவன் ; சிறுகுடிகிழான் பண்ணன் என்ற கொடைவள்ளல்பால் பெருமதிப்புடைய வன்; மலையமான் திருமுடிக்காரியும், சோவேந்தனும் அவன் பகைவர்; சோழர் குடியிலும் அவனுக்குப் பகைவர் இருந் தனர் ; சேரர் தலைநகராகிய கருவூரை முற்றுகையிட்டு அழித்தான்; இமயமலையில் தங்கள் குல இல்ாஞ்சனேயாகிய வில்லைப் பொறித்துப் புகழ்பெற்று விளங்கிய சேர அர. சனத் தொலைத்தான் ; மலையமானப் போரில் வென்று அவன் மக்களைக் கைப்பற்றிக் கொணர்ந்து யானையைவிட்டு மிதித்துக் கொல்லத் துணிந்தான் ; அச் செய்கியறிந்த கோஆர்கிழார் என்ற புலவர் வந்து வேண்ட விடுதலை செய்தான். போரில் பொறுத்தற்கரிய கொடியனே என்ரு லும் புலவர்களிடத்தே பெருமதிப்புடையவன்; அவன் காலத்தில் அவன் நாட்டில் வெள்ளைக்குடி என்ற ஊரில் நாகனர் என்ற புலவர் இருந்தார்; அவ்வூரில் அவருக்கு உரிமையான நன்செய் கிலத்திற்குச் செலுத்தவேண்டிய இறைப் பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை; இறை கண்டுவோர் விடவில்லை; என்ன செய்வார் அவர் கிள்ளி வளனேக் கண்டார்; தன் குறைகூறினர்; அழகிய பாடல் ஒன்று பாடினர்; உடன்ே அரசன், அக் கிலத்திற்குச் சேரவேண்டிய பழைய கடனேயும் தள்ளிவிட்டு அங் கிலத் தையும் இறையிலியாக மாற்றினன். -