பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பெண்பாற் புலவர்கள்

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பதில் கிள்ளிவளவன் என்பதே அவன் இயற்பெயர்; குளமுற்றத் துத் துஞ்சிய என்பது, அவன் இறந்த பிறகு அவனுக்குக் கொடுத்த சிறப்புப் பெயர். ஒரே பெயர் கொண்ட அரசர் கள் பலர் வாழ்ந்தால், அவர்களேப் பிரித்து அறிவதற்காக, அவர் வாழ்க்கையோடு தொடர்புடைய சில நிகழ்ச்சிகளே அவர் பெயர்களோடு இணைத்து வழங்குவது வழக்கம். பழந்தமிழ் அரசர்கள் போர்வேட்கை யுடையவராவர்; ஆகவே, அவர்கள் அனைவரும் தங்கள் அரண்மனைகளி லேயே இறந்தார்கள் என்று சொல்வது இயலாது ; பல் வேறு இடங்களில் நடைபெற்ற போர்களில் ஈடுபட்ட அவர்கள் அப் போர்க்களங்களிலேயே இறந்திருப்பர். வாழ் வின் பயன் வீரச்சாவு என்பதே பழந்தமிழர் பண்பாடாத லின், அரசர்கள் அரண்மனையில் இறவாது அமர்க்களத்தே இறந்தால், அதை அவரின் புகழுக்குரிய செயலாகக் கொண்டு அவ் விடங்களின் பெயர்களே அவ் வாசர் பெயர் களோடு இணைத்து வழங்குவர்: காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ; யானைமேல் துஞ்சிய பெருமான் கிள்ளி வளவன், குளமுற்றம் என்ற இடத்தே இறந்தவன் ஆகவே, அவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என அழைக்கப்பெற்ருன். x

கிள்ளிவளவன் என்பதும் அவனுக்கு உரிய இயற் பெயரன்று; சோழ அரசர்கள் என்பதைக் குறிக்கச் சில சோழ அரசர் பெயர்களுக்குப் பின் வளவன் என்பதும் வரும்; கலங்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி : திருமாவளவன், மாவளத்தான். சோழ அரசர்கள் என்று அறிவிக்க வரும் இவ்விரு குறியீட்டுப் பெயர்களும் இணைய, கிள்ளி வளவன் என்பது இவனுக்குப் பெயராயிற்று. பழந் தமிழ் அரசர்கள் பெயரிடும் முறைகளுள் இதுவும் ஒன்று: பாண்டிய அரசர்கள் எனக் குறிக்கவரும் குறியீடுகள் மாறன் என்பதும், வழுதி என்பதுமாம் : முதுகுடுமிப் பெருவழுதி, நன்மாறன் ; இவை இணைந்து மாறன்வழுதி

என ஒரு பாண்டியன் பெயராக வருதலும் காண்க.