பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெண்பாற் புலவர்கள்

எதிர்த்த பகைவர்கள் எவ்வளவு பேராற்றல் வாய்ந்தவராயி லும், பாம்பினே அழிக்கும் இடியேற்றினப்போல் அவர் களே அழிக்கும் ஆண்மையுடையாய் என்பர் ; அதுவும் உனக்குப் புகழைத் தராது; முறை வேண்டினர்க்கும், குறைவேண்டினர்க்கும் பேர்அத்தாணிக்கண் இருந்து அறம் பிறழாது தீர்ப்பளிக்க வல்லாய் என்று கின்னைப் புகழ்வர் ; அதுவும் கின் புகழாகாது,” என்று கூறுகிரு.ர். இவ்வாறு கூறுவது, உண்மையில் புகழ்ச்சியன்று; இகழ்ச்சி என்றே எவர்க்கும் எண்ணத் தோன் அம். ஆனல், இவையெல்லாம் அவன் புகழாகா என்பதற்கு நப்பசலை யார் கூறும் காரணத்தை அறிந்தால், இதுவே உண்மைப்

பாராட்டு என்ற முடிவிற்கு வருவர்.

சோழர் குடியிற் பிறந்தவர் வழிவழியாகவே கொடுத் துப் புகழ் பெற்றவர். அவர்கள் குல முன்னேன் ஒருவன் தன்பால் அடைக்கலம் புகுத்த புரு ஒன்றைக் காப்பாற்று வதற்காகவே துலாவில் ஏறி அமர்ந்து தன் உடலையே தானமாகக் கொடுத்துள்ளான். அதைப்போலவே, சோழர் குடி தோன்றிய காலத்திலிருந்தே சோழர்கள் பெரு வீரர் கள்; அவர்களுள் ஒருவன், தேவர்க்கும் அசுரர்க்கும் கடந்த போரில் தேவர்க்குத் துணைபோய், அசுரர்கள் தங். கள் பாதுகாப்பிற்காகப் பெற்றிருந்த வானத்திலேயே பறந்த கிரியும் இயல்புடைய மூன்று பெருங் கோட்டை களே அழித்து அவ் வசுரர்களையும் கொன்ருன். சோழர்கள் என்றுமே முறைதவறியவரல்லர்; அவர்கள் தலைநகராகிய உறந்தை நகரில் உள்ள அறங்கூர் அவையிடத்தே அறம் என்றும் கின்று கிலேபெற்றிருக்கும் ; அதைப் புலவர் பல ரும் பாராட்டியுள்ளார்கள்.

இவ் வுண்மைகளே அறிந்தவர் நப்பசலையார். ஆகவே, புருவின் பொருட்டுத் துலைபுக்க சிபியின் வழிவந்தவனு கவே, வந்தவர்க்கெல்லாம் பொருள்களை வாரி வழங்கு கின்ற கின்செயல் கினக்குப் புகழாகாது ; அவுனர் கோட்டை மூன்றையும் அழித்த கின் முன்னேன் செய. லோடு ஒப்பிட்டு நோக்குங்கால், உன் ஆண்மை