பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கழிகாட்டு கல்லூர் நத்தத்தனர் 25

“............ ............தேம் பெய்து . . . . . . . . . .

அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின்

பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்விக் கூடுகொள் இன்னியம் குரல் குரலாக நூல்நெறி மரபிற் பண்ணி.' (சிறு பாண்: உஉசு-கட0)

நல்லூர் தத்தனர், தாம் பாடிய நல்லியக் கோடன் அளிக்கும் கொடைப்பொருளின் பெருமை அளவிடற் கரியது ; கொடுக்கும் அவன், கொடையாற் பெயர்பெற்ற கடையெழு வள்ளல்களினும் சிறப்புடையான் என்று கூற விரும்புவார், அவன் அளிக்கும் கொடைப்பொருளே நோக்கின், குட்டுவர்க்குரிய வஞ்சிநகர்ச் செல்வமும் சிறிதாம் ; செழியர்க்குரிய மதுரை மாநகர்த் திருவும் சிறிதாம் ; சோழர்க்குரிய உறந்தைநகரின் உறுபொருளும் சிறிதாம் என்றும், கடையெழு வள்ளல்கள் மேற்கொண் டிருந்த கொடைத் தொழிலாகிய மிக்க பாரத்தைத் தான்் ஒருவகைவே தாங்கி நிற்கும் உரனுடையுள்ளம் உடைய வன் நல்லியக்கோடன் என்றும் கூறியுள்ளார்.

'வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே; (சிறுபாண்: இ0 'மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே; ( . : சுன்) "ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே:' ( . . அக.) "எழுவர் பூண்ட ஈகைச் செங் நுகம் • , ,

விரிகடல் வேலி வியலகம் விளங்க ஒருதான்் தாங்கிய உரனுடை நோன்தாள்.” நல்லியக் கோடன்பால் தாம் கண்ட நற்பண்புகளைப் பர்ராட்டத் தொடங்கிய புலவர், அவன் வாயில், கடவுளர் உறையும் மகா மேருமலை ஒரு கண்ணே விழித்துப் பார்த்த தாலொத்த உயர்ந்த கோபுரவாயில் அவ்வாயில் பொரு கர்க்கு அடைக்கப்படா புலவர்க்கு அடைக்கப்படா அருமறை அறிந்த அந்தணர்க்கு அடைக்கப்படா ஆனல், இவ்வாறு அன்பராய் அன்றிப் பகைவராய் வருவார்க்கு, துழைதற்கரிய காவலையுடையது என வாயிற் சிறப்புரைப் பாராயினர்; . . . . . . . . . . . . . . . . . . . Commons sibiBOT (பேச்சு) 16:06, 27 பெப்ரவரி 2016 (UTC)