உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மாநகர்ப் புலவர்கள்

இனகின் எல்லினர் புகினே, பாலும் மிதவையும் பண்ணுது பெறுகுவீர், இவ்வாறே இப் புலவர்தம் செய்யுள் நலங்களே எடுத்துக் கூறிக்கொண்டே செல்லின் ஏடு விரியும் ஆதலின், இம்மட்டோடு நிறுத்திக்கொண்டு, புலவர் மேற்கொண்ட உவமைகள் சிலவற்றைமட்டும் எடுத்துக் காட்டுகின்றேன்.

மலைபடுகடாம் கூத்தரை ஆற்றுப்படுப்பது சண்டு, கூற்று நிகழ்த்துவோரும், அக்கூற்றினேக் கேட்போரும் கூத்தரே ஆதலின் புலவர் தாம் காட்டும் உவமைகள் எல்லாம் அக்கூத்தர் அறிந்தனவாகவே இருத்தல் வேண். டும் என எண்ணி அமைத்துள்ளார். ஆங்தைகள் எழுப் பும் குரலொலி, விரல்திண்டி எழுப்பும் சிறுபறை ஒலி போலும் , 'விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக், குடிஞை இரட்டும்" (140-141). ஆலமரத்தே கூடி இருக்கும் பறவைக்கூட்டம் எழுப்பும் பேரொலி, பல இசைக்கருவி கள் ஒன்று கூடி எழுப்பும் ஒலிபோலும், கோளி ஆலத்துக் கூடு இயத்தன்ன குரல் புணர்புள்' (268-269). அருவியில் ஆடும் மகளிர் எழுப்பும் ஒசை, தாளம் தெரிய எழும் துங்கள் இசைக்கருவிகளின் இன்னேசை போலும்; அருவி துகரும் வானரமகளிர் வருவிசை தவிராது வாங்குபு குடை தொறும், தெரியிமிழ் கொண்டதும் இயம்போல் இன் னிசை" (994-96 கிளேகளில் கீழும் மேலுமாகக் காய்த் துத் தொங்கும் பலாக்கனிகள், கூத்தர் தம் மத்தளங்களைப் போலும்; "சுரஞ்செல் கோடியர் முழவில் துரங்கி, முரஞ்சு கொண் டிறைஞ்சின அலங்குசினேப் பலவே' (148-144). முழவுபோலும் காட்டுப் பலாப்பழம்; "கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம்" (511). வரால் மீன்துண்டு, துடியின் கண்போலும்; "வராஅல் அடிக்கண் அன்ன குறை” (457-8). நுகரப்படும் பொருள்கள் ஒன்றை யொன்று ஒவ்வா. இனிமைவாய்ந்திருத்தல், இனிய பண்கள் பலவும் ஒன்றையொன்று, ஒவ்வா. இனிமை வாய்ந்திருத்தல் போலும், கல்லலியாழ்ப், பண்ணுப் பெயர்த்தன்ன காவும் புள்ளியும். நன்பல உடைத்து' (450-453), காட்டு