74 சங்கர ராசேந்திர சோழன் உலா 376. உருகிய செந்தமிழ்ச் செஞ்சாலி ஒங்கப் பெருகிய பொன்னிப் பெருக்கே-திருமயிலும் 377. சூழும் புகழ்க்கிளியும் சொல்லனமும் போர்க்குயிலும் வாழும் நிலைய மலர்க்காவே-ஏழுலகும் 7ே8. உற்ற ஒருதிகிரி ஒம்பும் வகைசெய்த கொற்ற வளவர் குலவிளக்கே-மற்ருெருத்தி 379. பூண்ட தனுக்கூன் நிமிர்த்தநீ போர்க்காமன் நீண்ட தனுக்கூன் நிமிர்த்தாயோ-ஆண்டொரு 380. வெங்கட் பெருமானைச் செற்றநின் வில்வாங்கித் திங்கட் கலையும் செருய்கொல்லோ-பைங்கானில் 376. செந்தமிழ்-தமிழ்க்கவிதை. செஞ்சாலி-செந்நெல். பொன் னிப் பெருக்கு - காவிரி வெள்ள நீர். திருமயிலும் - திருமகளாகிய மயிலும். - 377 சூழும் புகழ்க் கிளியும் - பரவும் புகழ் மகளாகிய கிளியும். சொல் அனமும் - சொல்லுக்குத் தலைவியாகிய கலைமகள் என்னும் அன்னமும். போர்க்குயிலும்-போரில் வெற்றியைத் தரும் வெற்றி மக ளாகிய குயிலும். நிலையமாகிய மலரையுடைய சோலையே, 377-8. ஏழு உலகத்தையும் பலருக்கும் பொதுவாகச் செய் யாமல் ஒரு சக்கரத்தால் பாதுகாக்கும்படி செய்த வெற்றியையுடைய சோழகுலத்துக்கு விளக்குப் போன்றவனே ஏக சக்கராதிபதி என்றபடி, மற்று : அசை. ஒருத்தி - குப்ஜை என்னும் வண்ணமகள். 379. பூண்ட தனு கூன் - ஏந்திய உடம்பின் கூன. நிமிர்த்தநிமிரச் செய்த. கண்ணன் கூனியாக இருந்த வண்ணமகளை நிமிர்த்திக் கூன் போகச் செய்தான். தனுக்கூன் - வில்லின் வளைவை. காமன் வில்லை வளைத்தால் காமுற்ருேர்க்குத் துன்பம் விளையும். 380. வெங்கண் பெரு மானை - வெம்மையான கண்னையுடைய மாரீசன் என்னும் பெரிய மானை. செற்ற-அழித்த, திங்கட்கலையும் - சந்திரனிலுள்ள கலைமானையும். அந்த மானைச் செற்ருல் தனக்குத் துன்பந் தரும் சந்திரனும் அழிவானென்ற எண்ணத்தால் சொன்னுள். -
பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/107
Appearance