உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 6.5 327 ஆந்தா மரையும்_அருவிப் புரிநூலும் : செந்தா மரைப்பொற் றிருமார்பும்-இந்துஎனப் 328. பூத்த உடையின் முதிர்நிலவும் பொற்கச்சை r யாத்த உடைவாள் இளவெயிலும்-நாத்துதிப்ப 329. ஆய்அளவும் கொள்ளா தழகொழுகி மாதிரத்துப் போய்அளவும் கண்அளவிப் போய்வளைந்தாள் நாயகா 380. பங்கே ருகத்துப் பணிலத் திருநிதியும் இங்கே கொடுக்கினும் ஏற்கிலேன்-எம்கோவே 331, சிந்தா மணியும் சுரர்தருவும் தேனுவும் . . வந்தாலும் வாரா வரவென்னேன்-அந்தநாள் 3.27. தாமரை - கைகள். அருவி போன்ற முந்நூல். திரு இருப் பதல்ை மார்பு செந்தாமரை போன்றதாயிற்று. திருமாலாக எண்ணிக் கூறியது. இந்து என்- சந்திரனைப் போல. 328. பூத்த - பொலிந்த. கச்சை யாத்த-இடையில் உள்ள கச்சை யிலே கட்டிய உடையின் வெள்ளே ஒளி நிலவையும், உடைவர்ளின் மெல்லிய செவ்வொளி இள வெயிலையும் ஒத்தன. திருக்கண் மலர் (324) முதலியவற்றை நாவானது துதிக்க (328). 329. ஆய் அளவும் கொள்ளாது. ஆராய்கின்ற எந்த அளவிற்கும் அடங்காமல், மாதிரத்துப் போய் அளவும் கண் - திசைகளில் சென்று உலவும்கண் கண்ணின் நீள அகலத்தைத் சிறப்பித்தபடி, கண் அளவிப் போய் வளைந்தாள்-கண்ணினுல் கலந்துபோய்ச் சூழ்ந்துகொண்டாள். இனி வருவன அவள் சோழனைப் பார்த்துக் கூறும் கூற்று. நாயகா : 330. பங்கேருகத்து பணிலத்து, இரு நிதியும் -தாமரையில் தோன்றும் பதுமநிதி, சங்கில் தோன்றும் சங்கநிதி ஆகிய இரண்டு நிதிகளும், நான் அவற்றைத் தேடிப் போகாமல் நான் இருக்கும் இவ்விடத்தில் கொண்டுவந்து கொடுத்தாலும். - 331. சிந்தாமணி - நினைத்தவற்றையெல்லாம் தரும் மணி. சுரர் தரு -கற்பகம். தேனு - காமதேனு. இவை மூன்றும் இந்திரனிடம் உள்ளவை. உம்பர்தருத் தேனுமணி’ (திருப்புகழ்.) வாரா வரவுநமக்கு வாராத லாபம், வரவு-லாபம். அந்த நாள் - பழங்காலத்தில். 9