பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன ( இந்நெறிகள் இந்த முன்னுரையின் இறுதிப்பகுதியில் சொற்பிரிப்புநெறி பற்றிய பகுதியில் விளக்கப்பட்டுள்ளன ).

கணிப்பொறியில் இடுவரல் செய்வதற்கு ஏற்ப மர்ரே எஸ். ராஜத்தின் சங்கஇலக்கியப் பதிப்பில் ( இந்தச் சொல்லடைவின் பதிப்பாசிரியரால் ) சொற்கள் சந்திபிரித்துத் தரப்பெற்றன. இரவுபகலாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணி ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் வரை நீடித்தது. அவ்வப்போது சந்திபிரித்துத் தரப்பெற்ற நூல்கள் தட்டச்சர்கள் திரு து. நடராசன், திருமதி சு. செந்தமிழ்ச்செல்வி இருவராலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் தனக்கென உருவாக்கிக் கொண்டிருந்த ரோமன் எழுத்துமுறையில் கணிப்பொறியில் இடுவரல்செய்யப்பட்டன. இந்தப் பணி 1987 ஏப்ரல் இறுதியில் நிறைவடைந்தது. சந்திபிரித்து இடுவரல் செய்யப்பட்ட இந்தத் தரவுகள் கணிப்பொறிமைய வழியமைப்பாளர் ப. சதாசிவம் அவர்களால் உருவாக்கப்பட்ட கணிப்பொறிநிரல் வழி செயலாக்கம் செய்யப்பட்டுச் சொல்லடைவாய் உருவாக்கப்பட்டது. ரோமன் எழுத்துமுறையில் இருந்த தரவுகளை அணங்கு எனும் தமிழ் எழுத்து வடிவிற்கு மாற்றிப் பெறப்பட்ட சொல்லடைவில் இருந்த பிழைகள் திருத்தமிடப்பட்டன; இந்தத் திருத்தங்கள் கணிப்பொறித் தரவில் ஏற்றப்பட்டன. இதன் பின்னர் சங்க இலக்கிய அகராதி உருவாக்கத்திற்கான அடிப்படைத் தரவாய்த் திருத்தமிடப் பட்ட சொல்லடைவு கணிப்பொறி அச்சுவடிவில் பெறப்பட்டது. சங்க இலக்கியச் சொற்கள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சொல்லடைவாய் உருவாக்கப்பட்ட இதுதான் தமிழ்ப்புலத்தில் முதன்முதலில் கணிப்பொறி வழி உருவாக்கப்பட்ட சொல்லடைவு, கணிப்பொறி அச்சுத்தாளில் (15 x 18 ) ஏறத்தாழ ஏழாயிரம் பக்கங்களில் உருவாக்கப்பட்ட இந்தச் சொல்லடைவு

புருவம் (6)

பொரு. 26; பரி. 4-22; பரி.தி. 1-36; கலி. 147-18; அக.39-21; ' புற. 361-15.)

கொலை வில் புருவம் அத்து கொழும் கடை மழை கண் பொரு.26
புருவம் அத்து கரு வல் கந்தரம் அத்து ஆல் பரி. 4-22
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவம் அத்து பரி.தி. 1-36
கலைஇய கண் புரும் தோள் நுசுப்பு ஏளர் கலி. 147-18
கோடு ஏந்து புருவம் ஒடு குலவு நுதல் நீவி அக. 39-21
வில் என விலங்கிய புருவம் அத்து வல் என புற. 361-15

எனச் சொல், சொல்லின் மொத்த வருகையிட எண்ணிக்கை, சந்திபிரிக்கப்பட்ட பாடல்வரிகள், பாடல் வரி எண்கள் எனும் அமைப்பில் அமைந்துள்ளது.

சங்க இலக்கிய அகராதித்திட்டம் இந்தச் சொல்லடைவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டபோது சங்க இலக்கிய உரைகளில் இருந்த -

vi