பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எதேச்சையாய்க் கண்டறியப்பட்டது ( ஜெர்மனியில் 1992-இல் வெளியிடப்பட்ட சொல்லடைவில் மேலும் கூடுதலான தவறுகள் இடம்பெற்றிருக்க மிகவும் வாய்ப்புள்ளது). பின்வரும் சில தவறுகள் இதற்குச் சான்று.

- தமிழ்ப் பல்கலைச் சொல்லடைவு மால்டனின் சொல்லடைவு - சரியான சொற்கள் இருளை கலி.103-20 எற்றை நற். 125-1| ஓடாப் அக.100-8 கனவ பரி. 3-90 காகும் புற. 56-9 பொய்யும் அக.48-19 இருளை கலி.103-20 எற்றை நற். 125-1 ஓடாப் அக.100-8 கனவ பரி. 3-90 காகும் புற. 56-9 பொய்யும் அக.48-19 இகுளை ஏற்றை ஓடா கணவ - காக்கும் - பொய் உம் -

இத்தகைய ஒத்த தவறுகளின் அடிப்படையில் இத்தவறுகள் எதேச்சையானவை அல்ல என்பதும் 1987-இல் உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகச் சொல்லடைவிற்கான தரவுமூலமே மால்டனின் சொல்லடைவுக்கும் மூலம் என்பதும் கண்டறியப்பட்டன. இந்தத் தகவல் பல்வேறுநிலையிலும் தமிழாய்வுலகிற்கு இனங்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறுநிலைகளிலும் கண்டறியப்பட்ட தவறுகளை நீக்கும் பணியும் திருத்தங்களை மேற்கொள்ளும் பணியும் . மேற்கொள்ளப்பட்டது. கணிப்பொறியில் உள்ள மூலத்தரவில் உள்ள வரிகளில் இந்தத் திருத்தங்கள் கணிப்பொறி வழியமைப்பாளர் ப. சதாசிவத்தின் உதவியுடன் இடப்பட்டன. இவ்வாறு திருத்தமிடப்பட்ட சங்கப் பாடல்வரிகளைக் கணிப்பொறிநிரல் வழி செயலாக்கம் செய்து அதன் அடிப்படையில் சொல்லடைவைப் பெறும் பணி, ப. சதாசிவம் அயற்பணியின் பொருட்டு அமெரிக்கா சென்றதால் தடைப்பட்டுப் போனது. 1998-இல் தடைப்பட்ட இந்தப் பணிக்குப் பின்னர், பழைய சொல்லடைவைக் கணிப்பொறியிலிருந்து பெறும் பணி மேற்கொள்ளப்பட்டது. மெபோ களத்தில் ( Memo Field ) இருந்த சொற்களின் வருகையிடங்களை வெளிக்கொணர இயலாத காரணத்தால் அந்தப் பணியும் தடைப்பட்டது. இதன் பின்னர் 2001 ஆகஸ்டு மாத இறுதியில் தஞ்சாவூர் வந்திருந்த ப. சதாசிவம் மெமோ களத்தில் இருந்த வருகையிடங்களை அந்தக் களத்திலிருந்து மீட்டுத்தந்தார். இது 1987-இல் பெறப்பட்ட சொல்லடைவே என்பதால் இந்தச் சொல்லடைவிலேயே நேரடியாகத் திருத்தங்களை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. ஆகஸ்டுமாத இறுதி முதல் இந்தப் பதிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ இரண்டு மாதங்கள் முழுமுயற்சியுடன் இந்தப் பதிப்புப்பணி நடைபெற்றது. 1996 வரையில் குறித்துவைத்திருந்த அனைத்துத் திருத்தங்களோடும் கூடிய திருத்தமான சொல்லடைவாய் இது தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

viii