பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்களில் வருவன. இவற்றில் மூன்துறை மால்டனின் சொல்லடைவில் உள்ளது. ஆனாலும் 18 வருகையிடங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன; தமிழ்ப் பல்கலைக்கழகச் சொல்லடைவில் இந்தச் சொல் வரும் 21 இடங்களும் தரப்பட்டுள்ளன. பெரும், துறை எனத் தனித்தனிச்சொற்களாகப் பிரிக்கப் பட்டதால் மால்டனின் சொல்லடைவில் பெரும்துறை கூட்டுச்சொல்லாய் இடம்பெறவில்லை. இந்தச் சொல்லடைவில் கூட்டுச்சொற்களாகத் தரப்பட்டுள்ள முன்நாள், மேல்நாள், வழிநாள், கள்வர்கோமான், களவர்பெருமகன், படைக்கட்டில், கணங்கொள், குடிப்பாடு, தழையணி, வெண்பொன், பசும்பொன், வெண்குருகு, வெண்காக்கை, போய்வெண்தேர், பசும்பூண்பொறையன், பசும்பூண்பாண்டியன், பசும்பூண் செழியன், மனைசெறிந்தளை, மறுமைஉலகம், மறுமைஉலகு, மணநாள், மணமகடூஉ, மங்கலமகளிர், மடல் ஏறி எனப் பலவாய் வரும் சொற்கள் மால்டனின் சொல்லடைவில் தனித்தனிச் சொற்களாய்த் தரப்பட்டுள்ளன.

மால்டனின் சொல்லடைவில் கூட்டுச்சொற்கள் தரப்பட்டிருந்தாலும் அவை ஒருமித்தநிலையில் தரப்பெறவில்லை. சில இடங்களில் கூட்டுச் சொற்களாயும் சில இடங்களில் தனித்தனிச் சொற்களாயும் கொடுக்கப் பெற்றுள்ளன. குறைபடா, குறைபட என்பன அவரின் சொல்லடைவில் இடம்பெற்றிருந்தாலும் குறைபடா என்பதில் பட்டினப்பாலையின் 125 ஆவது வரியும் குறைபட என்பதில் புறநானூற்றின் 161–1ஆம் வருகையிடமும் இடம்பெறவில்லை. கூட்டுண்ணும் என்பது தரப்பெற்றிருந்தாலும் கூட்டுண்ட ( மது. 762 ) தனிச்சொல்லாய்த் தரப்பெற்றுள்ளது. புறமாறி - ஐங். 226-3 இடம்பெற்றிருந்தாலும் புறம்மாறும் - கலி. 8-13, புறம்மாறு - அக. 194-3, புறம்மாறிய - கலி. 15-1, புறம்மாறி - கலி. 15-10, 120-5, 145-48, புறம்மாற - கலி. 121-7 என்பன கூட்டுச்சொற்களாய் இடம்பெறவில்லை. மால்டனின் சொல்லடைவில் குதிரை என்ற பொருளில் வரும் கடுமான், வயமான் என்பன பல இடங்களில் கூட்டுச்சொற்களாய் அன்றித் தனித்தனிச் சொற்களாகவே கருதித் . தரப்பெற்றுள்ளன. இவ்வாறே மாவிலங்கை ஒரு இடத்தில் ( புற-176-6) சேர்த்துக் கூட்டுச்சொல்லாயும் ஒரு இடத்தில் பிரித்துத் தனித்தனிச்சொற்களாயும் (சிறு.120) தரப்பெற்றுள்ளது.

இவ்வாறு பகுதிநிலையில் கூட்டுச்சொற்களாகவும் தனித்தனிச் சொற்களாகவும் தரப்பட்டுள்ள நிலைக்கு மாறாகத் துயில்மடிந்த - அக. 24-17, துயில்மடிந்தன்று - நற். 307-2, துயில்மடிந்தனள் - அக. 68-9, துயில்மடிந்து - ' சிறு. 154, பட். 117, புற- 126-7, துயில்மடிந்தென - புற. 320-3, துயில்மடியும் - நற். 271-2 என்பன எல்லாம் பிரித்தே தரப்பட்டுள்ளன.

கூட்டுச்சொற்களாகவே தரப்பட்டிருக்கவேண்டிய தொடுகலம் - அக. 196-4, மானவிறல்வேன் - மது. 344, நிறைப்போய்- புற, 398-14, பேரியாற்று -

xii