பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நன்றியுரை

சங்க இலக்கிய அகராதி, சொல்லடைவு ஆகியவற்றின் அடிப்படைத் தேவையை உணர்ந்த தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேரா. முனைவர் கி. கருணாகரன் அவர்கள் இவ்விரண்டின் பதிப்புப் பணியைச் சங்கஇலக்கிய அகராதித்திட்டத்தில் பணியாற்றிய அகராதியியல் துறையினரிடம் ஒப்படைத்தார். சங்க இலக்கிய அகராதிக்கான சொல்லடைவு உருவாக்கப் பணியை 1987 மார்ச்சு மாதத்தில் முழுமையாய் மேற்கொண்டவன் என்ற நிலையில் செம்மையான சொல்லடைவை உருவாக்கும் பணியை நான் மேற்கொண்டேன். இப்பணியில் என்னை முழுமையாக ஈடுபடவைத்ததுடன் விரைவில் பதிப்பிக்கவும் ஊக்குவித்தவர் பேரா. கி. கருணாகரன் அவர்கள்.

தற்போது இந்தச் சொல்லடைவைப் பதிப்பிக்க இசைவு வழங்கியதுடன் அணிந்துரையும் அளித்துச் சிறப்பித்தவர் தமிழ்ப் பல்கலைக்கழக இந்தாள் துணைவேந்தர் பேரா. முனைவர் சி. சுப்பிரமணியம் அவர்கள். இவ்விருவருக்கும் என்றும் என் அன்பான நன்றிகள்.

இந்தச் சொல்லடைவைத் தமது நிறுவனத்தின் மூலமாக வெளியிட வேண்டும் என்ற நோக்குடன் என்னை அவ்வப்போது துாண்டி 'இந்தச் சொல்லடைவுப்பணியை எப்படியாவது முடிக்க வேண்டும்' என்ற உத்வேகத்தை என்னுள் ஏற்படுத்தியவர் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னை இயக்குதர் முதுமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்கள்.

சங்க இலக்கிய அகராதித்திட்டத்தில் கணிப்பொறி வழியமைப்பாளராகப் பணியாற்றிய திரு ப. சதாசிவம் அவர்கள் இந்தச் சொல்லடைவின் பதிப்புப் பணியை நான் மேற்கொண்ட 1991-ஆம் ஆண்டுதொட்டுப் பலவகையிலும் உதவி புரிந்துள்ளார். அகராதி உருவாக்க காலத்தில் குறித்துவைத்திருந்த ஏராளமான திருத்தங்களைச் சொல்லடைவு உருவாக்கத்திற்கான அடிப்படைத் தரவான சங்கப் பாடல்வரிகளில் ஏற்றப் பெரிதும் உதவினார். திருத்தமிடப்பட்ட இந்தத் தரவின் அடிப்படையில் சொல்லடைவை உருவாக்கவிருந்தபோது அவர் அமெரிக்கா சென்றதால் அப்பணி தடைப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு இந்தத் திட்டத்தை எப்படியும் முடித்துத் தரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது பழைய சொல்லடைவிலேயே நேரடியாகத் திருத்தங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துப் பணியைத் தொடங்கியவேளையில் கணிப்பொறியின் மெமோ