பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிப்பில் (மூன்றாம்பதிப்பு) அரும்பத முதலியவற்றின் அகராதி .

ககரம் - சிறுபான்மை எதிர்காலங்காட்டி வருமென்பது 289 கங்குல் - இரா 161, 294, 323, 391, 624, 793, 882 கங்குலான் - இரவிடத்தே 399,71 கஞ்சங்குல்லை - கஞ்சா 639 கட்டளைக்கலி - 11

எனப் பாடலிலும் உரையிலும் இடம்பெற்ற சொற்களும் பெரும்பாலும் அவற்றின் பொருட்களும் சொல் இடம்பெற்ற நூலின் பக்கங்களும் தரப்பெற்றுள்ளன. இந்தச் சொற்பொருளடைவு 967-ஆம் பக்கம் முதல் 1196-ஆம் பக்கம் வரையில் 230 பக்கங்கள் அளவில் அமைந்துள்ளது. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த - சங்கஇலக்கியப் பதிப்புகள் அருஞ்சொற்பொருள் அகராதியைப் பதிப்பின் ஒரு பகுதியாய்க் கொண்டுள்ளன. 1954-இல் மர்ரே எஸ். ராஜம் சங்கஇலக்கிய மூலங்களைச் சந்திபிரித்துப் பதிப்பித்தவேளையில் அந்தப் பதிப்பின் அங்கமாக, துணைநூலாகப் பாட்டும் தொகையும் என்ற பெயரில் சங்கச் சொற்பொருள் அடைவு ஒன்று வெளியிடப்பட்டது. இது புலவர்கள் அகராதி, கதைகளும் வரலாற்றுக் குறிப்புகளும் போன்ற பல்வேறு அகராதிகளுடன் சொற்பொருள் அடைவை முதன்மைப் பகுதியாய்க் கொண்டுள்ளது. இதில்

தக்கவிர்போலும் - தகுதிப்பாட்டினை உடையீர் போலே இருந்தீர்
தக - தக்கிருக்கும்படி, பொருந்த
தகடு - பூவின் புறவிதழ்
தகடூர் - அதியமான் என்னும் தமிழ்ச் சிற்றரசனுக்குத் தலைநகராய் இருந்ததும் சேலம் ஜில்லாவில் உள்ளதுமான தர்மபுரி.

தகர் - ஆட்டுக்கிடாய், மேட்டுநிலம், வருடைமான், கிடாய்.
தகரம் - ஒரு மரம், மயிர்ச்சாந்து.
தகவு - கற்பு, தகுதி.


எனச் சொற்களும் அவற்றின் பொருட்களும் (வருகையிடக்குறிப்புகள் இல்லாபால் ) தரப்பட்டுள்ளன. இந்தச் சொல்லடைவில் எல்லாச்சொற்களும் இடம்பெறவில்லை. 1985-இல் மு.சண்முகம்பிள்ளை பதிப்பித்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பெற்ற குறுந்தொகைப் பதிப்பில் சொல்லடைவும் தொடரடைவும் தரப்பட்டுள்ளன.

அ (அழகு) 119: 1, 180:6
அ (சுட்டு ) 26:8, 63:2, 144:4, 256:4,
277:8, 297:1, 318:6, 364:6, 367:3
அஃகியோனே 346:3
அகல (வி) 24:6, 345:4
அகம் (இடம்) 319:4, 348:5, 370:4,376:6
(உள்) 42:3, 241:6
(மனம்) 317:1
(மார்பு) 346:7, 370:5

ii