பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எனச் சொல்லடைவு தரப்பட்டுள்ளது. வினைச்சொற்களுக்கு வி. என்ற இலக்கணக்குறிப்பும் பல்பொருட்சொற்களுக்குப் பொருள்களும் வருகை யிடங்களும் தரப்பட்டுள்ளன. தொடரடைவில்

அகல்: அகல் இலைப் பலவின் சாரல் 352:3 அகலம்: ஒண்தார் அகலம் 362:7 சாந்து புலர் அகலம் 150:3

எனச் சொல்வந்த இலக்கியத்தொடர்களுடன் வருகையிடங்களும் தரப் பெற்றுள்ளன. 2. 1967-70-ஆம் ஆண்டுகளில் பழந்தமிழ் நூற் சொல்லடைவு ( Index des mots de la litterature tamoule ancenne ) எனும் பெயரில் புதுவை பிரெஞ்சு இந்தியக் கலைக்கழகம் சங்கஇலக்கியம் தொடங்கி முத்தொள்ளாயிரம் வரையிலான இலக்கியங்களுக்கு மூன்று தொகுதிகளில் சொல்லடைவு ஒன்றை உருவாக்கி வெளியிட்டது. இந்தச் சொல்லடைவில்

கலுழி - குறி. 178; மலை . 555; நற். 33-4; குறுந். 356- 4; ஐங். 203-4; பதிற்று. 50-5; அகம். 157-3. கலுழும் - மது. 413; குறி. 248, 25+ நற். 66-10, 143-4, 157-7,195-9,208-3,327-2; கலி. 45-14, 124-16; அகம். 63-19, 182-12, 195-16; குறள். 1173-1.

எனச் சொல்லின் வருகையிடங்கள் தரப்பட்டுள்ளன. இது அடைவு அட்டைகளில் சொற்களைத் திரட்டி முழுக்கமுழுக்க மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட சொல்லடைவு என்பதால் விடுபாடுகளும் குறைகளும் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் இந்தச் சொல்லடைவே பல்வேறு ஆய்வுகளுக்கும் பேரளவில் தரவு திரட்டப் பயன்பட்ட ஆதார நுாலாய் இருந்துள்ளது. இந்தச் சொல்லடைவில்

ஈரிலைவரகின் கவைக்கதிர் நற். 121: 2,3 இனம் காக்கும் வேழம் கலி. 25:9 சுடர் நிமிர் அவிர் தொடி பதிற்று . 46:2) குவளைக் குறுந்தாள் நாண்மலர் குறுந். 270: 6,7 குவளைக் கூம்பவிழ் முழுநெறி புற. 116:1,2

எனத் தனித்தனிச் சொற்களாய்த் தரப்படவேண்டிய தொடர்கள் பல பதிவுகளாய்த் தரப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சொற்பொருள் அடிப்படையில் கூட்டுச்சொற்கள் பேரளவில் பதிவுகளாய்த் தரப்பட்டுள்ளன.

3. மொழியியல்கல்வி அறிமுகமாகி வளர்ந்த சூழலில் சங்க இலக்கியங்களுக்கு உருவாக்கப்பட்ட விளக்கஇலக்கண (Descriptive Grammar )

iii