பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சங்க இலக்கியத்தில் உவமைகள்

1.1.5 காதல் விருப்பால் தலைவியின் வாயிதழ்களும் பற்களும் அமுதத்தைப் போன்று தலைவனுக்கு இனிப்பதாகக் கூறப்படுகின்றது.

ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் -கலி,201/1

இக்கருத்துப் பெருவழக்காகச் சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ளது

1.1.6. காதல் வேட்கையால் துன்புறும் தலைவனுக்கு அவளே அது தீர்க்கும் மருந்தும் ஆகின்றாள்.

அருந்துயர் உழந்த காலை

மருந்துஎனப் படுஉம் மடவாள். நற். 384/10-11

மேற்காட்டிய இச்சான்றுகள் அனைத்தும் சூழ்நிலைக் கேற்ப உவமைகள் அமைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. இவை சொல்லும் பாததிரத்தின் மனநிலையை ஒட்டி அமைவன வாகும்.

1.2. அரியகாட்சிகளை உவமையாக அமைத்தல்

எங்கோ எப்பொழுதோ கண்டு அல்லது கேட்டு மனத்தில் நிறுத்திய காட்சிகளை வாய்ப்பு வரும்பொழுது உவமைகளாக அமைத்தல் தனிச்சிறப்பைத் தருகின்றது. அவற்றுள் சில பின் வருமாறு : -

1.2.1. குப்பை மேட்டில் கோழிகள் இரண்டு விலக்குவார் இல்லாமல் செய்யும் தனிப்போரும், இரண்டு களிறுகள் எதிர்ப் புறத்து நின்று மாறி இழுக்கும் தேய்புரிப் பழங்கயிறும், அளவுமிக்க வாடைக்காற்று வீசும் இருள்மிக்க இரவுப் பொழுதில் தனியே உச்சியில் சிறியகயிற்றால் கட்டப்பட்ட கன்றைப் பிரிந்த பசு இடம் மாற்றிக்கொள்ளாமல் ஈரத்திலே உழலும் நிலையும், போரால் அலைப்புண்டு வாழ்வோர் நீங்கிய பேரூரின் பாழ்பட்ட நிலையைக் காத்திருந்த தனிமகனின் மனநிலையும், நோன்பிகள் தைமாதத்தில் அவலை முங்கித் தின்னுதலும் நீக்குந்தொறும் நீங்கிப் பின்னர் மீண்டும் நெருங்கும் பாசியின் நிலையும், வழிபறிக்கள்வர் அம்பின் கூரிய முனையைச் செப்பம் செய்தற் பொருட்டுத் தன்

1. குறு. 141-2,; பதி. 16|12; 51/21; கலி. 4/13-14 அகம், 335,23-25. 2. குறு. 305/6. 3. நற். 284/9-11 4. நற். 109/5-10