பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 105

நகநுனியால் புரட்டும் ஒசையும் சுழலும் சக்கரத்தின் ஆரையின் பல்லி பொருந்தி நின்று அதனோடு சுழலலும், செருப் பினிடையே சிறுபரல் உள்ளிருந்தே அரித்துக் கொண்டிருக்கும் நிலையும்.' எப்பொழுதோ எங்கோ கண்ட அரிய நிகழ்ச்சிகளும் காட்சிகளும் ஆகும். அவற்றை நினைவில் வைத்துக்கொண்டு உவமைகளாக அமைப்பது நயமும் சிறப்பும் கொண்டவை எனலாம்.

1.2.2. மற்றும் வாழ்க்கையில் அன்றாடம் காணும் காட்சிகளிலும் ஒரு சில நினைவில் வைத்துக் கொண்டு அவற்றில் இருந்து வாழ்க்கைத் தத்துவங்களைக் காணக் கூடிய அரிய காட்சிகளும் உள்ளன. அவற்றையும் அரிய காட்சிகள் என்ற தலைப்பில் காட்டலாம்.

கன்றும் உண்ணாமலும் கலத்திற் படாமலும் நல்லான் தீம்பால் நிலத்து உகுதலும்' வானத்து மழை நீர் மண்ணில் கலந்து செம்புலப் பெயல்நீர் ஆக மாறுதலும் தச்சன் செய்த சிறு கைவண்டியை ஊர்ந்து இன்புறாது ஈர்த்து இன்புறும் குழந்தைகளின் செயலும்" நாளொன்றுக்கு எட்டுத் தேர்களைச் செய்யும் தச்சன் ஒரு திங்களெல்லாம் பாடுபட்டு அமைத்த தேர்க்காலும்’ ஊரில் விழாக் கொள்ளும்பொழுது பல்வேறு வேலைகளுக்கு இடையே விறுவிறுப்பாகக் கட்டிலைப் பின்னும் கட்டில் தொழிலாளியின் கைஊசியின் விரைவும்", சிறுபாம்பு பெரிய யானையைத் தீண்டி வருத்தும் செய்கையும்’ நினைவில் வைத்துப் போற்றக்கூடிய அரிய காட்சிகளாம்.

1.3. நடைபெறாத நிகழ்ச்சிகளை உவமையாக்குதல்

வாழ்க்கையில் என்றுமே நடைபெற இயலாத நிகழ்ச்சி களும் உவமையாகின்றன. அவற்றை இல்பொருள் உவமை அணி என்பர். அவை நடக்கவே இயலாத நிகழ்ச்சிகளாகும். நீருள் குவளை வெந்து போதலும்", ஞாயிறும் திங்களும் ஒன்றாக இணைந்து மண்ணுக்கு வருதலும்' நடைபெறாத

1. நற் . 153/8-10. 2. நற். 22/1-7.

3. குறு. 39911-4. 4. குறு. 16/1-5. 5. புற. 256/1-5. 6. புறம். 257/1. 7. குறு. 27.1-5. 8. குறு. 40/4-5. 9. குறு. 61:1-6 10. புறம். 87/2-4

11. புறம். 82/1-6