பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சங்க இலக்கியத்தில் உவமைகள்

நிகழ்ச்சிகளாம். அவை அந்த வகையில் உவமைநயச் சிறப்பு வாய்ந்தவையாகும்.

മ്ലങ്ങഖ போலல்லாமல் நடக்க இயலும் செய்திகள் உள. அவை சாதாரணமாக நிகழ்வதில்லை. அத்தகைய உவமைகள் கற்பனையாற்றல் மிக்கவையாகும். அவை ஒரு சில சங்க இலக்கியத்தில் வந்துள்ளமை காணப்படுகின்றன.

1.3.1. பரிசில் கொடுத்து வந்த வள்ளல் மறைந்த நிலையில் அதனால் ஏற்பட்ட துன்பமும், அத்துன்பத்தை வாய்விட்டுக் கூறமுடியாது தவிக்கும் நிலையும் நடைபெறாத நிகழ்ச்சியை உவமையாகப் பெற்றுள்ளன. 'மாரிக் காலத்து இரவுப் பொழுதில் கலங் கவிழ்ந்துவிடுகிறது. மிக்க துன்பத்தில் ஆழ்ந்த நெஞ்சத்தோடு ஒர் ஊமன் அதில் அகப்பட்டுக் கொள்கிறான். அவனோ வாய்விட்டுப் பேசிக் கத்தித் தெரிவிக்கும் ஆற்றல் அற்றவன் பேச்சு ஆற்றலோடு கண் பார்வையும் அவன் இழந்து நிற்கின்றான். பார்வை இழந்த ஊமன் கடலில் பட்டுத் தவிக்கின்றான், மழையும், இருளும் காற்றும் கலந்த அத்தகைய சூழ்நிலையில் அவன் துன்பத்தை மற்றவர்கள் அறிய முடியாது. தானும் தெரிவிக்க இயலாது. இச்செய்தியும் இச்செய்தியைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சூழ்நிலைகளும் அன்றாடம் நடை பெறக் கூடும் நிகழ்ச்சிகள் என்று கூற இயலாது, நடவாமலும் இருக்கும் என்றும் முடிவு கூறமுடியாது. அத்தகைய கற்பனை ஆற்றல் மிக்க செய்தி உவமையாக வந்துள்ளது.

மாரி இரவின் மரங்கவிழ் பொழுதில்

ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்குக்

கண்ணில் ஊமன் கடற்பட் டாஅங்கு

-புறம். 238/14-16

1.3.2. ஞாயிறு காயும் வெம்மையான பாறையின் பக்கத்தில் கையில்லாத ஊமன் கண்களாலேயே காக்கும் வெண்ணெய் உணங்கல் போலத் தலைவன் பிரிவுத் துன்பம் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது. கையில்லாத ஊமன் கண்களாலேயே பார்க்க முடியுமே தவிரப் பாறையில் தாமாக உருகும் வெண்ணெயைத் தானும் தடுக்க இயலாது; பிறரிடம் சொல்லியும் உதவி தேட முடியாது என்ற கருத்து அழகிய இவ் உவமை கொண்டு உணர்த்தப்படுகிறது.

1. நற். 753.4 ( 2, கலி. 430-31 3. புறம். 25/3.6