பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 9

9. தமிழ் இலக்கிய மரபைப் பொறுத்த வரையில் உவமை என்றால் உருவகம், உள்ளுறை, இறைச்சி என்பனவும் அடங்குகிறது என்பது பற்றி மாறனலங்காரம் இவை அனைத்தையும் ஆராய்ந்து விளக்குகின்றது. தொல்காப்பியர் உவமவியலில் உருவகத்தைக் குறிப்பாகப் பெறவைக்கின்றார்." உள்ளுறை உவமத்துக்கு விளக்கம் தொல்காப்பிய உவமை இயலிலும் அகத்திணை இயலிலும் தரப்படுகின்றது." இறைச்சி என்பதற்குப் பொருளியலில் மட்டும் விளக்கம் தரப்படு கின்றது." உரையாசிரியர்கள் இறைச்சிப் பொருள்களில் உவமச் செய்திகளையும் பெற வைக்கின்றனர். தண்டியலங்காரம் உவமை உருவகங்களை மட்டும் கூறுகின்றது." எனவே உவமை என்று கூறும்பொழுது பல்வகை உவமை வகைகளை ஆராய்வது மரபாக விளங்குகிறது.

10. தொல்காப்பிய உவம இயலோடு சங்கப் பாடல்களில் வரும் உவமைகள் நெருங்கிய தொடர்பைப் பெற்றுள்ளன; மற்றும் இவ்வடிப்படைகளே பிற்கால அணி நூல்களுக்கு முன் மாதிரியாக விளங்கியுள்ளன. சங்கச் செய்யுள்களில் உள்ளுறை இறைச்சிகளுக்கு விளங்கங்காணும் உரையாசிரியர்கள் தொல் காப்பியச் சூத்திர நெறிவகைகளைக் கொண்டே விளக்கம் தருகின்றனர். எனவே சங்கப் பாடல்களின் உவம இயல் பினைத் தொல்காப்பியமும் ஏனைய அணிநூல்களும் காட்டும் அணியியல் அடிப்படையில் ஆய்வு காண்பது இன்றி யமையாததாகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

11. ஏனை உவமம் எனக் கூறப்படும் பொது உவமைகள் உவமை, பொருள் என்ற இருவேறு செய்திகளைத் தாங்கி உருபு இன்றியும் உருபு பெற்றும் இயைந்து நின்றன எனலாம். இப்பொது அமைப்பினின்று மாறுபடுவனவற்றை வெவ் வேறு அணிவகைகளாகக் காட்டினர். தொல்காப்பியத்தில் வேறுபட வந்த உவமைத் தோற்றத்தின் இயல்பு பேசப் படுகிறது." ஏனைய அணி நூல்களும் இவ் உவமையின் பல்வேறு

மாறனங்காரம் பக். 117 முதல் 209, 270-274 தொல். சூ. 280 தொல். சூ. 294 முதல் 304; 49, 50, 51 தொல். சூ. 225, 226, 127 தண்டி - பொருளணியியல் 34-187 பக். தொல், உவமை இயல் சூ.307