பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 10 சங்க இலக்கியத்தில் உவமைகள்

படுகின்றன. அவை அவ்உவமைகளுக்கு ஒரு தனி அழகைத் தருகின்றன. வேண்டுமென்றே இவ்வாறே இத்தகைய உவமை களை அமைத்து அவற்றிற்கும் உவமைக்கும் உள்ள உறவையும் நெருக்கத்தையும் காட்டுகின்றனர். கீழ் வருவன இவ்வாறு அமையும் இடச்சார்பு பெற்ற உவமைகள் எனலாம்.

1.5.1. கருங்கைக் கொல்லன் ஆகிய இரும்பு வடிக்கும் தொழிலைச் செய்பவனின் உடம்பின் தோல், வடித்த இரும்பைப் போன்று இருந்தது என்று கூறப்படுகிறது.

இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.

-பத். 4/222-223

ஈண்டுக் கொல்னின் கைகள் இரும்புத் தகட்டுக்கு உவமைப் படுத்தப்பட்டுள்ளன. அவன் பயிலும் தொழில் பற்றிய உவமையே அவன் மேனியின் நிறத்திற்கும் மடிப்பு இல்லாத தோலுக்கும் உவமையாக அமைந்துள்ளது. இதே கருத்து அகநானூற்றுப் பாடலிலும் வருகிறது.

இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்.

-அகம். 172/6

1.5.2. கலித்தொகை நில உவமைகளை அமைத்தலை ஒரு தனிக் கலையாகவே போற்றியுள்ளது. முல்லை நிலமக்களாக்கிய ஆயர்களின் வாழ்வைச் சுற்றிப் பின்னப்பட்ட கலித்தொகைப் பாட்டு ஒன்றில் முல்லைநலச் சார்புபெற்ற பொருள்களும் தொழில்களும் உவமைகளாக வந்துள்ளன. இடைக்குல மக்களின் வாழ்வும் அவர்கள் தொழிலாகிய தயிர், நெய் முதலியன பெறுதல், பசுவைக்கட்டும் கன்று, கன்றைச் சுற்றித் தழுவும் பசு முதலியவை உவமைகளாக அமைந்துள்ளன. இது நாடகப் பாங்கில் அமைந்த செய்யுட் பகுதியாகும்.

'எம்மைத் திளைப்பதற்கு எளிமையாகக் கொண்டாய்; தொடுவதற்கு எளிமையாக இருத்தலைக் கொண்டு திளைப் பதற்கும் எளியவன் என நீ நினைக்கின்றாய்' என்று முல்லை நிலத் தலைவி அந்நிலத் தலைவனை நோக்கிக் கூறுகின்றாள். இதில் அமைந்துள்ள உவமை முல்லை நில இடச்சார்பு உடையதாம்.