பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சங்க இலக்கியத்தில் உவமைகள்

அழுந்துபடு விழுப்புண் அழும்புவாய் புலரா எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு.

-நற். 97-1-2

1.7.3. குவளை பறிப்போர் நீர் வேட்கையுறுதல் போல, என்பது எளில் கிடைக்கும் என்னும் பொருளைத் தருவது. இக்கருத்துடைய பழமொழி உமவச் செய்தியில் இடம் பெற்றுள்ளது. இதே போல மற்றோர் தொடரும் வந்துள்ளது. ஆம்பல் குறுநர் நீர்வேட்டது போல’ என்பது அது.

குவளை குறுநர் நீர்வேட் டாங்கு -நற் 332/2

ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கு -குறு.178/3

1.7.4. பால் நிலத்து உகுவதால் கறப்போருக்கும் பயன்

இல்லை; கன்றுக்கும் பயன்படாது; வீணாகப்போகும். இக் கருத்தினைக் கீழ்வரும் தொடரில் காண முடிகிறது.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு

-குறு. 27/1-2

1.7.5. கையில்லாத ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் பாழாகிவிடும் என்னும் கருத்துக் கீழ்வரும் உவமையில் அமைந்துள்ளது.

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல. குறு. 27/1-2

1.7.6. கண்ணில்லாத ஊமன் கடலில் பட்டால் தானும் தப்பி வர இயலாது; பிறர் உதவியும் நாட இயலாது. இக்கருத்துக் கீழ்வரும் உவமையில் அமைந்துள்ளது.

கண்ணில் ஊமன் கடற்பட்டா அங்கு.

-புறம் 238|16

1.7.7. பெருந்தேனைக் கண்ட இருகாலுமற்ற முடவன் கையிலிருந்த சிறு குடையைக் கொண்டு எட்டிப் பிடித்து அதனைப் பறித்துச் சுவைப்பது உவமச் செய்தியில் இடம் பெற்றுள்ளது. இஃது இக்காலத்தில் வழங்கும் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுதல் போல' என்னும் பழமொழி யோடு ஒத்து விளங்குகிறது.