பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சங்க இலக்கியத்தில் உவமைகள்

இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்.

-அகம். 339/9-10

1.7.12. தூங்குகின்ற புலியைத் தட்டி எழுப்புவது போல' என்னும் பழமொழி நாட்டில் வழங்கி வருகிறது. அதனை ஒத்த பழமொழி உவமச் செய்தியில் அமைந்துள்ளது. தூங்கும் புலியை இடறிய குருடன் நிலை உவமையில் கூறப் பட்டுள்ளது.

துஞ்சுபுலி இடறிய சிதடன் போல. -புறம். 73/7

1.7.13. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது நாட்டில் வழங்கும் பழமொழி. அதை ஒட்டிய கருத்தாகப் புலி பார்த்து ஒற்றிய களிறு தவறுமேயானால் அஃது எலியைப் பார்த்து ஒற்றாது என உவமச் செய்தியாகக் கூறப்படுகிறது.

புலிபார்த்து ஒற்றிய களிறுஇரை பிழைப்பின் எலிபார்த்து ஒற்றாதாகும். புறம். 257/16-17

1.8. உவமைகளில் நகைச்சுவை அமைத்தல்

உவமைச் செய்தியில் நகைச் சுவையைக் காணும் மன இயல்பு அவர்கள் அமைக்கும் ஒருசில உவமைகளில் காணப் படுகிறது.

1.8.1. காற்றால் அலைப்புண்ணும் ஆம்பல் மலர் தாமரையில் படிதல் அரசி சினந்திருக்கும் பொழுது அவள் எதிரே உள்ள பணிப்பெண்கள் உடனே கை தொழுது வணங்குவதற்கு உவமைப்படுத்தப்படுகிறது. -

சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர்

மடத்தகை ஆயம் கைதொழு தாங்கு

உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்

தாமரைக்கு இறைஞ்சும். நற். 100/1-4.

1.8.2. பாணன் தலைவனுக்காகப் பிரிந்து தலைவியின் வீட்டுமுன் இறைப்பின் ஒலையைத் தொட்டுக் கொண்டு ஏங்கி நிற்கின்றான். இந்நகைச்சுவை நிகழ்ச்சி அது பெறும் உவமைச் செய்தியால் மேலும் சிறப்பு அடைகிறது. அவ் உவமையில் நுட்பமான நகைச்சுவை அமைந்துள்ளது. இல்லந்தோறும்