பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†20 சங்க இலக்கியத்தில் உவமைகள்

வேங்கை மரத்தைப் புலி என நினைத்துத் தாக்கத் தொடங்கு கிறது. தன் சினம் தணிந்தபிறகு தன் தவற்றை உணர்ந்து நாணித் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறது. இது முழுவதும் நகைச் சுவை கலந்த நிகழ்ச்சியாகும்.

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை நனவில் தான்செய்தது மனத்தது ஆகலின் கனவில் கண்டு கதும்என வெரீஇப் புதுவதாக மலர்ந்த வேங்கையை அதுஎன உணர்ந்து அதன் அணிநலம் முருக்கிப் பேணா முன்பின் தன்சினம் தணிந்து அம்மரம் காணும் பொழுதில் நோக்கல் செல்லாது நாணிஇறைஞ்சும் நன்மலை நன்னாட. -கலி, 49/1-9.

1.8.6. கூனி ஒருத்தியும் குறளன் ஒருவனும் ஒருவரை ஒருவர் எள்ளி உரையாடும் உரையாடலில் அவர்கள் அமைக்கும் உவமைகளால் எள்ளல் சுவை மிகுகிறது. அவ் எள்ளல் சுவை நகைச்சுவைக்குக் காரணமாக அமைகிறது. நாடகப் பாங்கிப் அவர்கள் உரையாடல்கள் அமைந்துள்ளன. அவற்றில் அவர்கள் தோற்றமும் உருவமும் நகைச்சுவைப் பொருள்கள் ஆகின்றன. அவற்றை மிகுதிப்படுத்த உவமைகள் உதவுகின்றன. அவள் தோல் உரிக்கப்பட்ட கொக்குக்கு உவமைப்படுத்தப் படுகின்றாள். அதில் அவள் கூனிக் குறுகிய வடிவமும் முதுகுப்புறம் எழும்பிய நிலையும் சுட்டப் படுகின்றன.

உக்கத்து மேலும் நடுஉயர்ந்து வாள்வாய கொக்கு உரித்தன்ன கொடுமடாய். -கலி, 94/17-18.

அக்குறளன் வல்லுப் பலகையை எடுத்து நிறுத்தி வைத்ததுபோல விளங்குவதாகக் கூறப்படுகிறது.

வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள. -கலி,94/13-14.

மற்றும் நகைச்சுவையின் உச்சநிலை அவன் யாமை

எடுத்த நிறுத்தி வைத்ததுபோலத் தோள் இரண்டும் வீசி நடக்கும் செய்தியில் குறிப்பிடப்படுகிறது.