பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சங்க இலக்கியத்தில் உவமைகள்

வந்துள்ளது. இதுவே இப்பெயர் அவர் பெறுவதற்குக் காரண மாகியது. -

அத்தம் நண்ணிய அங்குடிச் சீறுர் மக்கள் போகிய அணிலாடு மூன்றில் புலம்பில் போலப் புல்லென்று அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே.

-குறு. 41/3-6. 1.9.2. ஊட்டியார்; நிறம் ஊட்டியது போன்று அசோகத்தின் தளிர்களும் ஊன்புரள் அம்பும் இருந்தன என்பது அவர் காட்டும் சொல்வோவியமாகும். ஒரே உவமையை இரண்டு பொருள்களுக்கு அவர் அமைத்திருப்பது அவர் தனிச் சிறப்பு என்பது தெரிகிறது.

ஊட்டியன்ன ஒண்தளிர்ச் செயலை, -அகம். 68/5. ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பு. -அகம் 388/24.

1.9.3. ஓர் ஏர் உழவனார். ஈரம்பட்ட செம்மையான பசும்புலத்தில் உழ விரும்பும் உழவன் ஒரே ஏர் மட்டும் வைத் திருக்கின்றான். அவன் ஆர்வமோ பெரிது; அவன் முழுவதும் செயல்பட முடியாது; அதைப் போலத் தலைவியின் நிலை இருந்தது என்று கூறப்படுகிறது.

ஈரம் பட்ட செவ்வி பைம்புலத்து ஓர் ஏர் உழவன் போல பெருவிதுப்பு உற்றன்றால் நோகோ யானே.

-குறு.131/4-6. 1.9.4. கங்குல் வெள்ளத்தார் : இப்பெயர் உவமையால் மட்டும் அமையவில்லை; உவமிக்கப்படும் பொருளாலும் இப் பெயர் சிறப்புப் பெற்றுள்ளது.

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே -குறு. 387/5. கங்குல் என்பது வெள்ளமாக உருவகிக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

1.9.5. கயமனார்: நெய்தல் மலர் கயம் மூழ்கும் மகளிரின் கண்களைப் போல விளங்குகின்றது என்ற சொல்லோ வியத்தைப் படைத்தார். ஆதலால் இவ்வுவமை இவ்வகையில்