பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சங்க இலக்கியத்தில் உவமைகள்

1.9.8. கழைதின்யானையார் முங்கிற் கழையைத்தின்னும் யானையின் காலில் அகப்பட்ட வலிமை பொருந்திய திண்ணிய முளையைப் போலப் பகைவரை அழிக்கும் ஆற்றல் தன் னிடத்து உள்ளதாகக் கூறும் வஞ்சினக் கூற்றில் கழையைத் தின்னும் யானையின் செயல் உவமையாக அமைக்கப் பெற்றுள்ளது.

கழைதின் யானைக் காலகப் பட்ட வன்திண் நீண்முளை போலச் சென்று அவன் வருந்தப் பொரேஎன் ஆயின். -புறம்.73/9-11.

1.9.9. கால்எறி கடிகையார் கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்டாற்போன்று சுவையையுடைய வெள்ளிய பல்லினிடத்தே ஊறிய குற்றமற்ற இனிய நீர் எனத் தலைவியின் வாயிதழ்ச் சுவை பாராட்டப்படுகிறது இதில் 'கரும்பின் கால் எறிகடிகை என்பது உவமையாக வந்துள்ளது. இதுவே அப்புலவரின் பெயர்க்குக் காரணமாகியது.

கரும்பின் கால் உறி கடிகைக் கண் அயின் றன்ன வாலெயிறு ஊறிய வசைஇல தீம்நீர்.

- குறு.267/2-4.

1.9.10. குப்பைக் கோழியார் தலவிை தான் உற்ற நோயினின்று விடுதலை பெறுவதற்கு இல்லை என்றும், அந் நோயாலேயே தான் அழிய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூற விரும்புகின்றாள். இந்நிலைக்குக் குப்பை மேட்டில் விலக்குவார் இல்லாமல் பொருது தாமே அழியும் கோழிப் போரினை உவமையாகத் தருகின்றார். இக் காட்சி அரிய காட்சியாகும். இதைப் பொருத்திக் காட்டியது அதைவிடச் சிறப்பு மிக்கது எனக் கூறலாம்.

குப்பைக் கோழித் தனிப்போர் போல விளிவாங்கு விளியின் அல்லது களைவோர் இலையான் உற்ற நோயே. - குறு. 305/6-8.

1.9.11. குறியிறையார்: தலைவனின் நகை விளையாட்டு முன் இன்பம் செய்து பின் துன்பம் செய்தமைக்கு, யானைக்கன்று முன் குறமகள் வதிந்த குறியிறை ஆகிய முற்றத்தின் கண் அவள் புதல்வரோடு பொருந்தி ஆடி அதுவே