பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சங்க இலக்கியத்தில் உவமைகள்

அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒன்றாகும். எனினும் அப்பெயர் கழைதின் யானையார் என்பவரால் பாடப்பட்டதாக அடிக்குறிப்புச் செய்திதரவில்லை; அப்பாடல் சோழன் நலங் கிள்ளி என்பவனால் பாடப் பெற்றது என்று அடிக்குறிப்புச் செய்தி கூறுகிறது. புறம் 204 கழைதின் யானையார் பாடியது என்று தரப்படுகிறது. இது குறித்து டாக்டர் மொ.அ.துரையரங்கசாமி அவர்கள் 'சங்ககாலச் சிறப்புப் பெயர்கள் என்னும் ஆய்வு நூலில் இரண்டு கருத்துகளைத் தருகின்றார். இரண்டு பெயர்களும் ஒரே அரசனைக் குறிப்பதாகும் என்பது அவர் கருத்தாகும்.

இதே ஆசிரியர் கழைதின் யானை என்னும் தொடர் வர மற்றொரு பாடலும் பாடியிருக்கலாம் என்றும் அது கிடைக்காமல் மறைந்து போயிருக்கலாம் என்றும் கூறுவர். எப்படியோ பெயரும் பாடற் செய்தியும் முறை பிறழ்ந்து விட்டன என்பது மட்டும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்


1.10. மனநிலையைச் சித்திரிக்கும் உவமைகள்

மாந்தரின் பல்வேறு மனநிலைகளைக் கூர்ந்து அறியும் திறன் ஒரு சில உவமைகளில் வெளிப்படுகின்றது. மன நிலையை உவமச் செய்திகளில் வெளிப்படுத்துவது மாந்தரை நன்கு அறிந்து காட்டுவதால் அது கவிஞரின் திறனை வெளிப்படுத்துகின்றது. அவை உவமை நயங்களாக அமைகின்றன.

1.10.1. கடன் பெற்றுத் துன்புறுவோர், மிகை படச் செலவு செய்து வருந்துபவர், கட்குடியர், சூதாடுவார், பொதுமக்கள் மனநிலை ஆகிய இவை கலித்தொகையில் அழகாகச் சித்திரிக்கப்படுகின்றன. கடன் பெறும்பொழுது மலர்ச்சியோடு பெறுதலும் அவன் திருப்பிக் கேட்கும் பொழுது மனம் சாம்புதலும் செலவாளி செல்வரை அணுகும்பொழுது வாய்விட்டுக் கேட்டுப்பெற நாணுதலும் அரசு ஆணையாளர் கள் மக்களிடம் கேட்கும் வினாக்களுக்குத் தலையசைத்து ஒப்புதல் தெரிவித்தலும், கள்ளரைக் காணாதவிடத்தும் அவர்களுக்காகத் தாம் கண்டதாக ஒப்புதல் தெரிவித்தலும்" கடன் கொடுத்தவன் கடன் பெற்றவனைப் பார்க்கும்பொழுது


1. சங்ககாலச் சிறப்புப் பெயர்கள். மொ.அ.துரை அரங்கசாமி, பக். 48-50. 2. கலி. 22/1-4. 3. கலி. 61|1.5. 4. கலி. 81/25-27.