பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் - 131

முதற்பொருளுக்கும் உள்ள தொடர்பாகும். எனவே பருப் பொருள்களாகிய நிலம், நீர், தீ, காற்று, விசும்பு, ஞாயிறு, திங்கள், விண்மீன், மின்னல், இடி, மழை, காடு, கடல், ஆறு, குளம், அருவி முதலியவற்றையும், செடி, கொடி, விலங்கு, பறவைகள் மற்றும் உயிர்ப் பொருள்கள் உயிர் அல் பொருள் கள் முதலியவற்றையும் இயற்கைப் பொருள்கள் என்று கூற வேண்டியுள்ளது.

1.1.1. மனிதனின் முயற்சியும் ஆக்கமும் இன்றி இயல்பாக அமைவனவற்றை இயற்கைப் பொருள்கள் என்று கூறலாம். இவற்றினின்று அமைவது வாழ்வியல். இதனை உரிப்பொருள் என்று தமிழறிஞர்கள் வரையறை செய்தனர். தொல்காப்பியர் பொருளை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று வகையாகப் பகுத்துக் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும். இது தமிழ் இலக்கிய மரபின் ஆடிப்படையாகும். இவற்றுள் முதலும் கருவும் இயற்கைப் பொருள்களாம்.

1.1.2. இயற்கையை நேரிடையாகக் கண்டு, அவற்றைச் சார்பாக அமைத்து, உரிப்பொருளாகிய அகப்புறப் பொருட் செய்திகளை அமைத்தல் சங்க இலக்கிய மரபாகும். இவையே யன்றி வாழ்வியல் செய்திகளுக்கும். இயற்கை வருணனைச் செய்திகளுக்கும் அவர்கள் துய்த்துக் கண்டு உணர்ந்த அனுபவப் பொருளாகிய இயற்கையை உவமையில் வைத்துள் ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும். உவமையில் அமையும் இயற்கையைப் பற்றிய செய்திகள் சில குறிப்பிடத்தக்க மரபுகளைப் பற்றி இயங்குகின்றன. அவை பின்வருமாறு:

1.1.2.1. நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய இவற்றை யும் இவற்றோடு பிறவற்றையும் சேர்த்தும் குறைத்தும் உவமச் செய்தியில் கூறல் அக்கால மரபாக விளங்கியது. மற்றும் பருப்பொருள் ஆகிய இவற்றை நுண்பொருள்கள் ஆகிய நட்பு, ஆற்றல், அறிவு, பொறுமை, சூழ்ச்சி, வலிமை, ஆக்கல், அழித்தல் முதலியவற்றிற்கு உவமப் படுத்தலும் அக்கால மரபாக விளங்கியது. இவை பெருகிய வழக்காகும்: 1. தொல், அகத்திணையில் சூத்திரங்கள் 3 முதல் 18 வரை. 2. நற். 264/1-2; குறு. 3/1-4; 95/3.5; பதி. 1/9-10; 14/1-4; 24/15-16;

90/14-17; புறம். 2/1-8; 20/1-5; 30|1-5; 41/16-17; 51/1-5 55/13-15.