பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 133

உவமப்படுத்தியது சிறப்பு வழக்காகும். அது பல்வகை மலர் களுக்குத் தனித்தனியே உவமையாகியது. அலரி, இலவம்: தாமரை, தோன்றி," எ ம்பு.’ செயலை வெட்சி, வேங்கை." மராஅம், கோங்கு, வாகை, பிண்டி" கொன்றை," முதலிய மலர்களுக்குச் சிறப்பாகவும், பெயர் குறிப்பிடாமல் 19ుత్థఅు பொதுவாகவும் உவமையாகியது, 4 இருப்பைத் தளிர், செயலைத்தழை" முதலிய தளிர்களுக்கும் நெருப்பு, நிறம் பற்றி உவமையாகியது. எனவே தீயின் ஒளியில் மலர்களின் அழகைக் கண்ட கவிஞர்களின் காட்சி இவ் வுவமைகளில் புலனாகின்றது எனலாம். மிகுதி பற்றி ஒவ்வோர் குறிப்பு மட்டும் கீழே தரப்படுகிறது.

1.1.2.5. மலைவீழ் அருவி அவர்களுக்கு இனிய காட்சியாக விருந்தளித்தது எனலாம். மகளிரின் கண்ணி," கொடிகள்." திங்களின் கதிர்," முத்து." ஆரம்" முதலிய வற்றிற்கு உவமையாகியது. அதன் ஒசை தேரின் மணி யோசை முழவொலி அலர் முதலியவற்றிற்கு உவமையாகி யுள்ளது. எனவே அதன் அசையும் காட்சியும், நிறைவும், ஒசையும் அவர்கள் போற்றிக் கண்ட செய்திகள் எனலாம்.

1.1.2.6. அற்று அற்று ஒழுகும் ஆற்றின் கருமணல் மிகுதியை அறல் என்று கூறி வந்தனர். அதனை மகளிர் கூந்தலுக்கு உவமித்தது பெருவழக்காகும். 4

1.1.2.7. ஒடும் ஆறு அதன் பரப்பாலும் அகலத்தாலும் தெருக்களுக்கு உவமப்படுத்தப்பட்டது பெருவழக்காக விளங்கியது.

1. அகம். 191/2. 2. அகம். 245/14-15, 3. பத். 4/481. 4. அகம். 218/20 5. பத், 8/66. 6. பத். 13/59-60. 7. பரி. 13:59-60. 8. அகம். 398/17. 9. பத், 10/498. 10. அகம். 153/16-18. 11. 88/10 12. பதி. 6/700-701. 13. பத், 6/277, 14. பத். புறம். 249/3. 15. அகம், 351/7-8. 16. அகம். 188/12. 17. நற். 88/8-9. 18. பதி. 25/10-11. 19. அகம், 362/11-15. 20. பரி. 18/46. 21. புறம். 198/1-2 22. குறு. 78/1-3.

23. அகம். 184/17-24. 24. அகம். 303/3-7,