பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i86 சங்க இலக்கியத்தில் உவமைகள்

மழை பொழியும் காலத்தைக் கார்காலம் என்றும் கூறினர். அதே போல, மை என்பதும் மேகத்தை உணர்த்தியமை குறிப்பிடத் தக்கதாகும்.' பெயல் என்னும் சொல்லும் மழையைக் குறித்தது.

1.1.2.15. காற்று, போர்ப்படைகளின் செலவுக்குப் பொதுவாகவும்: குதிரை’ தேர்' இவற்றின் வேகத்திற்குச் சிறப் பாகவும் உவமையாயின. யானையின் செலவுக்குக் காற்று ஒரே ஓர் இடத்தில் உவமை ஆகியுள்ளது:

1.1.2.16. குன்று யானைக்கும்." மணலின் குவி யலுக்கும்’ உவமையாகியது இது பெரு வழக்காகும். குன்று போல் குவிக்கப்பட்ட மணல் குவியலை எக்கர் எனக் குறிப் பிட்டனர். கடல், சேனையின் பரப்புக்கும், காற்று, குதிரை, தேர்ப்படைகளின் செலவுக்கும்; குன்றுகளும் மலைகளும் யானைகளுக்கும் உவமையாகியமை ஒரு குறிப்பிட்ட பொருள் மரபை உணர்த்துகிறது.

1.1.2.17. ஞாயிறு ஒளியுடைய பொருள். அதனை மன்ன வர்களின் புகழுக்கு உவமித்தமை சிறப்பு வழக்காகும்." ஞாயிறு கண்டு தாமரை மலர்தல் என்று கூறப்படுதல் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. அதற்கு மாறாக ஞாயிற்று ஒளியை நாடும் நெருஞ்சிப்பூ, மன்னரை நாடும் புலவருக்கு உவமிக்கப் பட்டுள்ளது சிறப்புச் செய்தியாகும்.

1. ஐங். 304/4; பதி. 43/1, பரி. 12:15; 22/29; கலி. 55/1-3; 64/1-2;

147|19; 14/4, 60/2; 131/21; குறு. 19912-5ட209/7; அகம். 198/5; 225|15; பத். 6/417. ஐங். 492/1-5. குறு. 199/2-5; 209/7; பதி. 41/22-23; 52/5; பரி. 10|47; பத். 6/417. அகம். 199/24; 298/9-10, புறம், 381/10; பத். 6/183. பரி. 2/31. குறு. 250;3-4; பதி. 80/13. புறம். 178/2; 229/21; அகம். 334/8; பத். 6/435-441. - 7. குறு. 189/5, கலி. 33/31; அகம். 251/7; பத். 6/51-52, 6/388;

6/435-441. 8. பத். 1/82. 9. புறம். 125/9; 140/8-9; 308/2; 368/1-3; 387/22; பத். 4/351 -353. 10. நற். 207|5; 254/2; 260/4; குறு. 236|3; அகம். 310/10; கலி. 127/6. 11. கலி. 127/6