பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 137

1.1.2.18. திங்களின் பல்வகை வடிவும் நிலைகளும் உவமையாயின. நிறைமதி: தேய்மதி: வளர்மதி, பிறைமதி: எட்டாம் நாள் திங்கள், மறுக்கொண்டமதி, அரவுமாய் மதி, வைகறை மதி, பகல் மதி: நிலவு." மீன்சூழ்மதி." எனப் பல்வகை நிலைகளில் திங்கள் உவமை ஆகியது. எனவே கவிஞர்களுக்கு நிலவு நெருங்கிய உறவுடையது என்பது மட்டுமின்றி அதன் பலவகை வடிவுகளில் நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்களாக விளங்கினார்கள் என்பதும் அறிய முடிகிறது. இவற்றுள் பிறைமதி அவர்கள் * மிகுதியாகக் கவர்ந் துள்ளது. அதனைக் குழவித்திங்கள் எனவும், திங்கள் குழவி' எனவும், மதி அரும்பு, 4 எனவும் அழைத்தமை குறிப்பிடத்தக்க செய்தியாகும். பிறைமதி மகளிர் நுதலுக்கு உவமை யாகியது பெரு வழக்காகும்.

1.1.2.19. மழை மகளிர் கண்களுக்கு உவமை ஆகியது பெருவழக்காகும். மழைக்கண் என்பது பயின்று வந்த வழக் காகும.

1.1.2.20. மின்னல் ஒளிபெற்ற பொருள்களுக்கு உவமை ஆகியது. மகளிர் இடை” அவர்கள் அணிந்த இழைகள்."

1, நற். 77/1, பதி. 69/1; அகம். 177/15: புறம், 42,21; பத். 3/47-48. 2. புறம், 8:5-10; 59/5-9; 64/12-15; 228/8-9; 231|6; 30/1-5;

பத். 10:84-85. 3. புறம். 155/5-9. 4. முதல் 89 வரை மிகுதி பற்றி ஒவ்வொரு சான்று மட்டும் தரப்படுகிறது. 5. பரி. 11:31-39. 6. கலி. 71/7-8. 7. குறு. 289/1-3. 8. கலி. 120/1-8. 9. பத். 2/10-11. 10. அகம். 29.9/11-13. 11. ஐங். 456/2. 12. புறம், 372/13. 13. புறம், 160/8-9. 14. கலி. 103/15; பத். 4/384. கலி. 80/18.

15. அகம். 192/1.

16. நற். 120/7, 167/1; 250/7, 263/1; குறு. 256/2-3; 371/5:ஐங்.443/2-3; பரி.இணை 2/30, கலி. 45:23; 53/14-15, 55/6-14: 61/19; 99/10, 124/8; 125/23; அகம். 115/13; 136|21; 207|13; பத். 2/25.

17. (மிகுதி பற்றிச் சில தரப்படுகின்றன) நற். 5/9: ஐங். 243/4;

குறு. 22:56; பதி. 21/35; பரி. 18/16; கலி. 77/4: அகம். 33/9; புறம். 16/3; பத். 2/25, 4/386; 7/38.3. கலி, 57,4-5; அகம். 126;21.

18. பதி. 81/28; பரி. 12/11; 21/54-55, அகம். 158/3-5; பத். 1/84-85;

6/665-666; 6/678-679.