பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 139

1.1.2.23. மகளிரின் தோற்றமும் அழகும் இயற்கைக்கு மிகுதியாக உவமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். அதில் ஒரு சில குறிப்பிட்ட பொருள் மரபுகள் காணப்படுகின்றன. இயற்கை மகளிரின் சாயலைப் படம் பிடித்துக் காட்டியது. மழை, மின்னல், திங்கள், ஆற்று அறல் முதலியன மகளிர்க்கு உவமையாகியதைப் போல, செடிகொடி, மலர், தழைகளும் உயிரினங்களும் மகளிர்க்கு உவமை ஆயின. இம்மரபே பெரும்பாலும் பிற்காலத்திலும் போற்றப்பட்டது எனலாம். அவை கீழ் வருமாறு:

1.1.2.23.1. மகளிர் நடைக்கும் ിക്കു பெண் யானை, பெண்மான்' மயில்," அன்னம் முதலிய வற்றை உவமைப்படுத்தினர்.

1.1.2.23.2. மகளிர் வருந்திய நிலையில் அவர்கள் பொதுவாக வாடிய நெய்தல் மலர்களுக்கும், சிறப்பாக தேர்க் கால் மித்த் நெய்தலுக்கும்" உவமிக்கப்பட்டனர். தீயும்' நீரும்’ காற்றும் அலைத்த தளிர்களும் உவமையாயின. கலையைப் பிரிந்த மான்" அம்பு பட்ட்மான்' முதலியவற்றிற்கும் உவ மைப்படுத்தப்பட்டனர். அவர்கள் அழகிய தோற்றம் பூங் கொடிக்கும்", வாடிய நிலை பூஉதிர்ந்த கொடிக்கும்' உவ மிக்கப்பட்டது.

1.1.2.23.3 மகளிரின் அழகியநிறம் மின்னல்ஒளிக்கும்", பொன் நிறத்திற்கும்" உவமிக்கப்பட்டது. அவர்கள்மேனியின்

ஐங் 416|45; பரி 10/47; அகம் 276/815, 369/11. நற் 37|47, 204/911; 32/3; பத் 1/216.

கலி 55/1516. ஐங் 258/2; பத் 6/608; குறு 2/3 கலி 57/2; பத் 9/149; (சாயல்) நற் 30114; பரி 20/69; கலி 30/6; 56/1516; புறம் 318/2; 295/13; பத் 3/16; 6/706; அகம் 385|1. 5. பரி 10|44; 12/27; கலி 56/1516.

6. குறு 309/6; ஐங் 135/3. 7. குறு 336/46. 8. குறு 383/46, 9. பதி 52|21. 10. அகம் 162/5. 11. நற் 37|47. 12. நற் 61/23.

13. பரி 7,56; 12/89; 16/20, 29/95; 10/94; 21:50, 21/6163; 22/4344;

கலி 62/5; 67/10; 88/1; 62/5154; ட்த் 6|446; 10|424.

14. கலி 132/1819: அகம் 1516; புறம் 224/1317.

15. கலி 139/5; 141/1718; காட 6/665666; 6/789.