பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 147

தோள்.' முதலிய தொடர்கள் பெருகிய வழக்கு ஆயின. தோள் களின் மென்மைக்கும் திரட்கிக்கும் பருமைக்கும் இவை உவமை யாயின.

1.1.2.23.14. மகளிரின் மேல்லிய விரல்களுக்குக் காந்தள் ഗുണകഥ് நறவத்தின் இதழ்களும்’ ஞாழல் மலர்களும்." உவமையாயின. விரல்களின் நகங்கள் முருக்கிதழுக்கும்." கிளியின் முக்கிற்கும் உவமைப்படுத்தப்பட்டன.

1.1.2.23.15. மகளிரின் துடைகள் (குறங்கு) பிடியினது துதிக்கைக்கும்.' வாழை அடிமரத்திற்கும், உவமிக்கப்பட்டன. வடிவுபற்றி இவ்வுவமைகள் கூறப்பெற்றிருக்க வேண்டும்.

1.1.2.23.16. மகளிரின் சீறடிக்கு நாயின் நா உவமிக்கப் பட்டது. நீர் வேட்கையாலும் ஒடிக் களைத்த இளைப்பாலும் வெளியே நீட்டத் தொங்கவிட்டிருக்கும் நா அவர்கள் நினை விற்கு வந்தது போற்றத்தக்க சொல்லோவியமாகும். அழகிய ஒவியமாக அக்காட்சிஇலக்கியத்தில் நிலைத்த நிற்கிறது." மலர்களின் ஒளிமிக்க இதழ்களுக்கும்" தாமரை மலர்க்கும்' உவமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க செய்தி ஆகும்.

1.1.2.23.17. மகளிரின் கொங்கைகளைப் பல்வகை மலர் களின் முகைகளுக்கு உவமித்துள்ளனர். பொதுவாக முகை களையும்" சிறப்பாக நீர்ப்பூ முகை (கயமுகை)" தாமரை." கோங்கு"முகைகளையும் உவமைகளாக அமைத்துள்ளனர்.

மற்றும் யானையின் மருப்பும், மழைநீர்க் தமிழிகளும் குரும்பையும் இவற்றிற்கு உவமை ஆகி உள்ளன.

1. நற். 352/11; குறு. 13111; பதி.12/22; 54/3: கலி. 21/4; 39/16;

45/13-15; 56|19-20; அகம். 18/17.18; 33/14-15; 82/1-2; 87/16; 114/14; 343/1, 390/10; பத் 2/32; 10:57,

2. நற். 355/2; 379/9-13; குறு. 1/71; ஐங், 293/1-21; பரி. 19176; 20; 98;

கலி. 40/11-12; 43/9-8; புறம் 144/9; பத். 2/33; 3/167; 9/152-154.

3. கலி. 84/22. 4. நற். 267/3-5. 5. அகம். 317/4-6. 6. பத். 2/34. 7. பத். 2/40; 3/19-20. 8. பத். 3/20-21. 9. நற். 25/26-12; பத். 2,42, 3/17-18; 10,42-43.

10. பதி.52/19. 11. கலி. 13/11, 12. கலி. 68/16; பத். 3/72. 13. பரி. 8/114. 14. கலி. 22/15-16.

15. கலி.56/23-24; 117/2.4; அகம். 240/11 புறம். 336/8-11;

பத் 1/34-35, 3/23-26. 16. மருப்பு: அகம். 26/6-8; புறம். 337/21-22.