பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 153

இசையவில்லை என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது. குடநாடு:

... 2 . 3 . * - 4 . - 5 மாந்தை, ஆமூர், நார்முடிச் சேரலின் நாடு, நந்தனின் நிதி, காவிரிப் பூம்பட்டினம், பாழி என்னும் ஊரில் கிடைக்கும் நிதி, நன்னனின் நாடு, ஆகிய ஊர்கள் இவ்வகையில் உவமை களாகக் கூறப்படுகின்றன.

1.2.5 தலைவியின் பற்கள், தோள்கள், கண்கள், வடிவு, சாயல், நறுமணம் முதலியன ஊர்களோடு சார்த்தப்பட்ட பொருள்களுக்கு உவமைப் படுத்தப்பட்டன. அவ்வூர்ப் பெயர் கள் அரசர்களின் பெயர்களோடு சார்த்திக் கூறப்பட்டன. கொற்கை முத்து.' கொல்லி மூங்கில், குடந்தை நீலம்" கொற்கை நெய்தல்," கொல்லி மயில், கொல்லிப் L_HTöᏈᎣ6Ꮒ ] , மற்றும் பல ஊர்களின் கானத்தின் நறுமணம் முதலியன இவற்றிற்கு உவமையாயின. இவ்வகையிலும் புறச் செய்திகள் அகப்பொருள் செய்திகளுக்கு உவமையாயின.

1.2.6. மகளிரின் கண்களில் அழகையும், குளிர்ச்சியை யும், அன்பையும், காதலையும் கண்ட வீரர்கள் அவற்றின் கூரிய பார்வையின் ஆற்றலையும் உணர்ந்தனர். கண்களைக் காணும்பொழுது போர்க்களக் காட்சிகளும் கண்முன் நின்றன. 16 அம்பு" யானை மருப்பு முதலியன உவமையாயின. இவையும் அகப்பொருள் செய்திகளுக்கும் புறப்பொருள் செய்திகள் உவமையாதலுக்குச் சான்றுகள் எனவும் கொள்ளலாம். காதலைக் கண்ட வீரர்கள் வீரத்தையும் அக்காதலில் கண்டனர் என்பது தெரிகிறது. வீர

போர்க் கருவிகளாகிய வேல்,

1. அகம். 91; 12-18. 2. அகம். 127; 3-12. 3. பதி. 159; 14-21. 4. அகம். 193; 20-24. 5. 251; 5-6; 265; 1-6. 6. பத். 9, 218-220. 7. அகம். 298; 1-3. 8. அகம். 199; 19-24. 9. நற். 23 6-9; ஐங் 185; 1-2; அகம், 27; 7-10, 10. அகம். 33; 14-15; 213; 15-16. 11. நற். 379; 6-9. 12. அகம். 130; 11-14. 13. நற். 265; 4-9.

14. குறு. 89; 4-7; 100 5-6; அகம். 62; 12-14; 209, 10-17. 15. நற். 6, 10-11; குறு. 84 3-5; 199, 2-5; அகம் 69; 17-20; 78;

12-24; 152; 15-18; 208; 4-24; 238; 13-18; 338; 48; 399-2. 16. பரி. 12:69; கலி. 124; 15-16; அகம். 27 15-17; 77; 6-19; 336;

12-13; புறம். 350-9; பத், 3-158. . 17. நற். 13:3-8; 75:7-8:குறு. 272:5-7; பரி 20, 37, 21-24.