பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள 155

1.2.8. பெருநில மன்னர்களின் வரலாறும், குறுநில மன்னர்களின் வரலாறும் மக்கள் மனத்தில் இடம்பெற்று நாடறிந்த செய்தியாகப் பேசப் பட்டதைப் போலவே நாட்டுக் கதைகளாக ஒருசிலர் வாழ்வியலும் பேசப்பட்டன. அவற் றுள்ளும் துன்ப நிகழ்ச்சிகளும் அவலச் செய்திகளும் பலரும் பேசிப் பகிர்ந்து கொண்ட செய்திகளாகும். எனவே, நிலமாளும் மன்னர்களின் செய்திகளைப் போலவே குடிமக்களின் நிகழ்ச்சி களும் நாடறிந்த செய்திகள் ஆயின. அவற்றையும் உவமை களில் பொருத்திப் பேசியமை இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளில் கீழ்வருவன ஒரு சிலவாகும்.

ஆதிமந்தி ஆட்டனத்தி இவர்களின் காதல் வாழ்வும் ஆட்டனத்தியைப் பிரிந்த ஆதிமந்தியின் அவல நிலையும், தலைவனைப் பிரிந்து வருந்தி அழுது அரற்றிய வெள்ளி வீதியாரின் துன்ப வாழ்வும், தந்தையைக் கொன்ற கோசர் களைப் பழிவாங்கிய அன்னி மிஞலி என்பாளின் வீர வர லாறும், பெண் கொலை புரிந்த நன்னன் என்பானின் கொடுமையும், ஒரு பெண்ணின அணிகலன்களை வெளவி அறியேன் என்று கூறிய அறனிலாளனைப் பற்றி அவன்மீது சாம்பலைக் கொட்டி அவமானப்படுத்திய நிகழ்ச்சியும், ஒரு முலை குறைந்த நங்கை ஒருத்தி நறுவேங்கை நிழலில் ஏதிலாளன் செய்த கொடுமையால் அவலித்து நின்ற நிலையும் இன்ன பிறதனிச் செய்திகளும் இவ் உவமைகளில் இடம் பெற் றுள்ளன.

1.2.9. புறப்பொருட் செய்திகளுக்கும் அகப் பொருட் செய்திகள் ஒரு சிலவும் உவமையாயின. எனினும் இவை அருகிய வழக்கே ஆகும்.

1.2.9.1. தாம் விரும்பிய அழகிய மகளிர் ஊடலால் துளிர்த்த கண்ணிருக்கு அரசன் அஞ்சுவதை விடப் புலவர்களின் வறுமைக்கு அஞ்சினான் என்று கூறப்படுகிறது. ஈண்டுப்

1. தொல். புறத்திணையியல். 79.

2. அகம். 76/7.13; 222; 5-12; 376, 412; 396, 11-15; குறு. 31, 1-6;

45, 12-15; 135, 1–5; 236, 14-21.

3. அகம். 45, 12-15; 147, 8-10.

அகம். 196, 8-13, 262, 4-13.

5. குறு. 292, 1-6.

4.